என் மலர்
விளையாட்டு

விருதுக்கு பிச்சை எடுக்க வேண்டும் எனில், ஏன் பதக்கம் வெல்ல வேண்டும்? மனு பாக்கர் தந்தை
- இந்தியா சார்பில் பங்கேற்று இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றார்.
- விருது வென்றவர்கள் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை.
பாரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா சார்பில் பங்கேற்று இரண்டு வெண்கல பதக்கங்களை வென்றவர் மனு பாக்கர். விளையாட்டு துறையில் சிறந்த வீரர், வீராங்கனைக்கு அளிக்கப்படும் கேல் ரத்னா விருதுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
30 பேர் கொண்ட விருது வென்றவர்கள் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. இது மனு பாக்கர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. தன் மகளுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்படாதது குறித்து பேசிய அவரது தந்தை ராம் கிஷான், இன்னும் என் மகள் என்ன செய்ய வேண்டும் என்று ஆதங்கத்துடன் கேட்டார்.
இது குறித்து பேசிய அவர், "விருதுகளுக்காக பிச்சை எடுக்க வேண்டும் எனில், எதற்காக ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வெல்ல வேண்டும்? ஒரு அரசு அதிகாரி முடிவு செய்கிறார், கமிட்டி உறுப்பினர்கள் மௌனம் சாதிக்கின்றனர். எனக்கு எதுவும் புரியவில்லை. இப்படித் தான் நீங்கள் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பீர்களா?," என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் விருது வழங்கக்கோரி விண்ணப்பித்து இருந்தோம், ஆனாலும் எங்களுக்கு கமிட்டியிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கப் பெறவில்லை," என்று தெரிவித்தார்.






