என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    என் மனைவிக்கு மைதானத்தில் இருந்து பறக்கும் முத்தத்தை நான் கொடுத்ததில்லை- அஸ்வின்
    X

    என் மனைவிக்கு மைதானத்தில் இருந்து பறக்கும் முத்தத்தை நான் கொடுத்ததில்லை- அஸ்வின்

    • அஷ்வின் மிகவும் சீரியஸ் ஆன நபர் என்று நினைக்கிறார்கள்.
    • கிரிக்கெட் வரலாறு எப்போதும் மதிப்பு மிகுந்த வீரர்களை தான் நியாபகம் வைத்திருக்கும்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய சுற்றுபயணத்தில் இடம்பெற்றிருந்த அவர் 3-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் ஓய்வு முடிவை அறிவித்து நாடு திரும்பினார்.

    ஓய்வு அறிவித்த நிலையில் சக வீரர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் ரவிச்சந்திரன் அஸ்வினை டேக் செய்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்தனர்.

    2010-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகமான அஸ்வின் அதற்கு முன்னதாக இளம் வயதில் கிரிக்கெட்டில் தான் சந்தித்த சவால்கள், ருசிகர சம்பவங்கள் குறித்து கிரிக்கெட் எழுத்தாளர் சித்தார்த் மோங்காவுடன் இணைந்து புத்தகம் எழுதியுள்ளார்.

    இப்புத்தகம் தொடர்பாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலில் அஸ்வினை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் அதர்டன் பேட்டி எடுத்தார்.

    அதில் பேசிய அஸ்வின், "நான் யார் என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். ஏனென்றால் பல முறை நான் விக்கெட் எடுக்கும்போது விராட் கோலி துள்ளி குதித்து கொண்டாடுவார். அதனால் கோலி மிகவும் வேடிக்கையான நபர் என்றும் அஷ்வின் மிகவும் சீரியஸ் ஆன நபர் என்று நினைக்கிறார்கள்.

    அதனால்தான் நீங்கள் ஏன் எப்போதும் சீரியசாக இருக்கிறீர்கள்? என்று ஒருவர் என்னிடம் கேள்வி கேட்டார். அதற்கு எனது பதில் என்னவென்றால், நான் எப்போதும் சீரியஸ் ஆன நபர் கிடையாது. நான் என் நாட்டிற்காக ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல என் கையில் பந்து இருக்கும்போது, என் மனது அதை நோக்கியே சிந்தித்து கொண்டிருக்கும்.

    அடிக்கடி, நான் 5 விக்கெட்டுகளை எடுக்கும்போது மைதானத்தில் இருக்கும் எனது மனைவிக்கு நான் இதுவரை பறக்கும் முத்தத்தை கொடுத்ததில்லை. அதனால் நான் நானாக இருப்பதில் இருந்து நிறைய மாற்றம் அடைந்ததாக உணர்ந்தேன். எனவே எனது புத்தகத்தில் அதை வெளியிட விரும்பினேன்.

    இப்போது நிறைய பேர் விராட் கோலியை பற்றி பேசுகிறார்கள். ரோகித் சர்மாவை பற்றி பேசுகிறார்கள். நான் வளர்ந்தபோது நிறைய பேர் சச்சினை பற்றி பேசினார்கள். கிரிக்கெட் என்பது அணி சார்ந்த விளையாட்டு ஆனால் வரலாறு எப்போதும் மதிப்பு மிகுந்த வீரர்களை தான் நியாபகம் வைத்திருக்கும். என் வாழ்க்கையில் என் அம்மா அப்பாவிற்கு நான் தான் மதிப்பு மிகுந்த வீரர். அது ரோகித், கோலி அல்ல. ஒவ்வொருவரின் பயணமும் தனித்துவமானதுமானது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான்தான் மதிப்பு மிகுந்த வீரர்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×