என் மலர்
விளையாட்டு
- விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
- விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலியின் 4 ஆம் இடத்தில் யார் களமிறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது. விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலிக்கு மாற்று வீரராக கருண் நாயரை விளையாட வைக்கலாம் என்று முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளே ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "முதல் தர கிரிக்கெட்டில் ரன்களை குவித்திருக்கும் கருண் நாயர், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற தகுதியானவர். அவரால் விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த சையத் முஸ்தாக் அலி டிராபி தொடரில் கருண் நாயர் தான் அதிக ரன்கள் குவித்தார்.இதனை தொடர்ந்து நடைபெற்ற ரஞ்சி டிராபியில் 54 சராசரியுடன் 863 ரன்கள் குவித்தார். இதில் 4 சதம், 2 அரைசதம் அடங்கும்.
- விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
- ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார்.
தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில், "ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
ஜூன் 20-ந்தேதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
- சொகுசு SUVயின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2.4 கோடி ஆகும்.
- விராட் கோலி பயன்படுத்தும் காரில் மகுடம் சூட்டுவது ஆடி R8 V10 பிளஸ் ஆகும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் இவர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விராட் கோலி 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனிடையே விராட் கோலி எந்த வகையான கார்களை பயன்படுத்தி வருகிறார், அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்...
விராட் கோலி பயன்படுத்தும் கார்களில் SUVகளில் ரேஞ்ச் ரோவர் எவோக் ஒன்றாகும். இதில் 3.0 லிட்டர் இன்ஜீனியம் டர்போசார்ஜ்டு இன்லைன் 6 மைல்ட் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வெஹிக்கிள் (MHEV) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 394 ஹெச்பி பவர் மற்றும் 550 நியூட்டன் மீட்டர் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த சொகுசு SUVயின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2.4 கோடி ஆகும்.

விராட் கோலி பயன்படுத்தும் கார்களில் மற்றொன்று ஆடி R8 LMX. இந்த உயர் செயல்திறன் கொண்ட வாகனம் ரூ.2.97 கோடி மதிப்புடையது மற்றும் 602 ஹெச்பி பவர் மற்றும் 560 நியூட்டன்-மீட்டர் உச்ச இழுவிசையை வழங்கும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் V10 எஞ்சினைக் கொண்டுள்ளது.
மேலும் விராட் கோலி பயன்படுத்தும் காரில் மகுடம் சூட்டுவது ஆடி R8 V10 பிளஸ் ஆகும். இந்த ஸ்போர்ட்ஸ் கார் அதன் 5.2 லிட்டர் V10 எஞ்சினுக்கு பெயர் பெற்றது. இது 602 ஹெச்பி பவர் மற்றும் 560 நியூட்டன் மீட்டர் டார்க்கை உருவாக்குகிறது. இதன் விலை ரூ.2.72 கோடி ஆகும்.

கோலியின் வாகனங்களில் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் உள்ளது. இதன் விலை சுமார் ரூ. 5.25 கோடி. பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்த சொகுசு செடான் நேர்த்தியான வடிவமைப்பையும் உயர் செயல்திறனையும் ஒருங்கிணைக்கிறது மற்றும் பிராண்டின் வரிசையில் கூட சிறப்பு வாய்ந்தது.
கடைசியாக பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ரூ.3.29 கோடிக்கு கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு எஞ்சின் விருப்பங்களை வழங்குகிறது. 4.0 லிட்டர் V8 ட்வின்-டர்போ ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் 6.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு யூனிட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் அதீத சக்தி மற்றும் காற்று மாசை குறைப்பது என இருவித பயன்களை வழங்குகிறது.
- தென்னாப்பிரிக்காவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
- இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளுக்கு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் இருக்க மாட்டார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும், இங்கிலாந்து அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் இருப்பதாலும் இரு அணிகளை சேர்ந்த பல வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மார்கோ ஜான்சன் (பஞ்சாப்), மார்க்ரம் (லக்னோ), ரியான் ரிக்கல்டன் (மும்பை), வில் ஜாக்ஸ் (மும்பை), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி), ஜோஃப்ரா ஆர்ச்சர் (ராஜஸ்தான் ராயல்ஸ்), ஜேக்கப் பெத்தேல் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஜோஸ் பட்லர் (குஜராத் டைட்டன்ஸ்) ஆகியோர் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
- விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் தேசிய அணியில் விளையாடினார்.
- தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ் 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தார்.
உலக கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் டோஸ் சாண்டோஸ் ஜூனியர் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கால்பந்து உலகில் நுழைந்துள்ளார்.
செவ்வாயன்று நடந்த விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் 15 வயதுக்குட்பட்ட பிரிவு தேசிய அணியில் இடம்பெற்ற சாண்டோஸ் அறிமுகமானார். இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
போர்ச்சுகல் அணிக்காக தனது மகன் அறிமுகமானதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், " போர்ச்சுகல் அணிக்காக நீ அறிமுகமானதற்கு வாழ்த்துக்கள். உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்!" என்று ரொனால்டோ பதிவிட்டார்.
இந்த கால்பந்து போட்டியைக் காண வந்த ரசிகர்கள் சாண்டோஸ் உடன் செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டினர். அவரது தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ், 7 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் தலைமை பயிற்சியாளராக நியூசிலாந்தைச் சேர்ந்த மைக் ஹெஸன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் ஏழு பேர் விண்ணப்பித்திருந்தனர். ஹெசன் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஏஎல்) நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.
50 வயதான இவர் ஏற்கனவே நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் இருந்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் இருந்து இவர் தலைமை பயிற்சியாளராக செயல்பட உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வி கூறியதாவது:-
பாகிஸ்தானின் வெள்ளை பந்து கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவரது நிபுணத்துவத்தையும் தலைமையையும் நாங்கள் எதிர்நோக்குகிறோம் என்று நக்வி கூறினார்.
பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளராக முன்பு நியமிக்கப்பட்ட கேரி கிர்ஸ்டன், கில்லஸ்பி உள்ளிட்டோர் சில நாட்களிலேயே பதவியில் இருந்து விலகிய நிலையில், இடைக்கால பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் பதவி வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன.
- இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலையும் தென் ஆப்பிரிக்கா அணி தற்போதும் அறிவித்தனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சேனுரான் முத்துசாமி இடம் பிடித்துள்ளார்
நாகையை பூர்வீகமாகக் கொண்ட இவர், 2019ல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகி இதுவரை 4 டெஸ்டில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11-ந் தேதி தொடங்க உள்ளது.
- இந்த போட்டிக்கான இரு அணிகளும் தங்களது அணிகளை அறிவித்துள்ளது.
2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்திய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3 - 1 என வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மறுபுறம், தென்னாப்பிரிக்காவும் அதிக வெற்றிகளை பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 11 அன்று தொடங்க உள்ளது.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி இன்று காலை அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் இடம் பெற்ற டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்டார்க், ஹசில்வுட் ஆகியோர் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் டெஸ்ட் தொடருக்காக ஐபிஎல் தொடரில் விலக வாய்ப்பு உள்ளது.
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:-
உஸ்மான் கவாஜா, சாம் கோன்ஸ்டாஸ், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட், நாதன் லியோன், மேத்யூ குஹ்னெமன், பிரெண்டன் டாகெட் (டிராவலிங் ரிசர்வ்)
இந்நிலையில் டெம்பா பவுமா தலைமையிலான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஐபிஎல் தொடரில் முக்கிய பங்கு வகிக்கும் ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன் ஆகியோர் உள்ளனர். இது ஐபிஎல் அணிகளுக்கு பின்னடைவாக இருக்கும்.
டெம்பா பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், மார்கோ ஜான்சன், ககிசோ ரபாடா, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, கார்பின் போஷ், கைல் வெர்ரைன், டேவிட் பெடிங்ஹாம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், செனுரன் பட்டுசாமி, டேன் பட்டுசாமி.
- ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார்.
- 14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.
ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.
அதைதொடர்ந்து ரோகித் சர்மாவும், விராட் கோலியும் 20 ஓவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
தற்போது 1 வாரத்துக்குள் இருவருமே டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டியில் மட்டுமே இனி விளையாடுவார்கள்.
இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.
இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறும்போது, 'இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய 'ஏ' அணி அங்கு செல்கிறது. இந்த அணியில் விளையாடி 3 முதல் 4 சதங்கள் அடிக்க கோலி விரும்பினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான ஆர்வத்தில் அவர் இருந்தார்' என்றார்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு பிறகு கோலி ரஞ்சி டிராபியில் ஆடினார். இதனால் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ஆர்வத்துடன் தான் இருந்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மீது அவருக்கு இருந்த அதிருப்தி, ரோகித்சர்மாவின் ஓய்வு போன்றவற்றால் கோலி முன்னதாகவே ஓய்வு முடிவை அறிவித்து விட்டார்.
ஆஸ்திரேலிய பயணத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வியால் இந்திய வீரர்கள் குடும்பத்தினரை அழைத்து செல்ல கடும்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இங்கிலாந்து பயணத்தின் போதும் இதே கட்டுப்பாடு இருக்கும். இதனால் பி.சி.சி.ஐ. மீது அவர் அதிருப்தியில் இருந்தார்.
மேலும் ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சீனியர் வீரராக விராட் கோலி மட்டுமே இருப்பார். இந்த டெஸ்ட் தொடருக்கு சுப்மன்கில் அல்லது ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படலாம். இளம் வீரரின் கீழ் விளையாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கருதினார். இதன் காரணமாகவே அவர் தனது ஓய்வு முடிவை எடுத்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு மட்டும் தன்னை மீண்டும் கேப்டனாக நியமிக்குமாறு விராட் கோலி கேட்டுக் கொண்டதாகவும், அதை பி.சி.சி.ஐ. நிராகரித்ததாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
ஓய்வு குறித்து விராட் கோலி முன்னதாகவே பி.சி.சி.ஐ.யிடம் தெரிவித்து இருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி அவரிடம் ஓய்வு குறித்து மறுபரிசீலனை செய்யுமாறு பி.சி.சி.ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் பி.சி.சி.ஐ. வேண்டுகோளை நிராகரித்து டெஸ்டில் இருந்து நேற்று விடைபெற்றார்.
14 ஆண்டு கால அவரது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வந்தது. பல்வேறு சாதனைகளை புரிந்து சாதித்து இருந்தார்.
- இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
- சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம்.
ஐ.பி.எல். போட்டி முடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்தியா பங்கேற்கும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இத்தொடரில் யாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இஷான்கிஷன், கருண் நாயர், ஆகாஷ்தீப், ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்களுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால் ஆகியோரும் டெஸ்ட் அணியில் இடம் பெறலாம். சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்படலாம்.
விராட் கோலியின் நம்பர் 4 இடத்தில் கே.எல்.ராகுல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய அணி வீரர்கள் விவரம்:-
சுப்மன்கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜெய்ஷ்வால், கே.எல்.ராகுல், கருண் நாயர், ரிஷப்பண்ட், துருவ் ஜூரல், நிதிஷ்குமார் ரெட்டி, ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சிராஜ், முகமது ஷமி, ஹர்சித் ராணா, ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்.
- நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும்
- ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்தைத் தொடர்ந்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போட்டிகள் மீண்டும் வரும் 17 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று தொடங்குகின்றன. ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரோன் தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மே 24 ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது. நிறுத்தம் செய்யப்பட்ட ஓவர்களில் இருந்து இந்த மேட்ச் தொடங்கும் என கூறப்படுகிறது.
ப்ளே ஆஃப் சுற்றுகளையும் சேர்த்து மொத்தம் இன்னும் 17 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இவை பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய 6 இடங்களில் மட்டுமே நடைபெறும். இதில் எதுவும் சேப்பாக்கத்தில் நடைபெறாது.
ப்ளே ஆஃப் சுற்று விவரங்கள்:
குவாலிபையர் 1 - மே 29
எலிமினேட்டர் - மே 30
குவாலிபையர் 2 - ஜூன் 1
இறுதிப் போட்டி - ஜூன் 3 ஆம் தேதி முறையே நடக்க உள்ளது.
- ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல்.
- பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து இ-மெயில் வந்துள்ளது.
மைதானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதால் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெறியேற்றினர்.
மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.






