என் மலர்
விளையாட்டு

விராட் கோலியின் ஆடம்பர கார் கலெக்ஷன்: டாப் 5 லிஸ்ட் பயங்கரமா இருக்கே...!
- சொகுசு SUVயின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2.4 கோடி ஆகும்.
- விராட் கோலி பயன்படுத்தும் காரில் மகுடம் சூட்டுவது ஆடி R8 V10 பிளஸ் ஆகும்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. சமீபத்தில் இவர் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் விராட் கோலி 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவார் என்பதால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது. இதனிடையே விராட் கோலி எந்த வகையான கார்களை பயன்படுத்தி வருகிறார், அதன் அம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்ப்போம்...
விராட் கோலி பயன்படுத்தும் கார்களில் SUVகளில் ரேஞ்ச் ரோவர் எவோக் ஒன்றாகும். இதில் 3.0 லிட்டர் இன்ஜீனியம் டர்போசார்ஜ்டு இன்லைன் 6 மைல்ட் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வெஹிக்கிள் (MHEV) எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 394 ஹெச்பி பவர் மற்றும் 550 நியூட்டன் மீட்டர் டார்க்கை உற்பத்தி செய்கிறது. இந்த சொகுசு SUVயின் ஆரம்ப விலை தோராயமாக ரூ.2.4 கோடி ஆகும்.
விராட் கோலி பயன்படுத்தும் கார்களில் மற்றொன்று ஆடி R8 LMX. இந்த உயர் செயல்திறன் கொண்ட வாகனம் ரூ.2.97 கோடி மதிப்புடையது மற்றும் 602 ஹெச்பி பவர் மற்றும் 560 நியூட்டன்-மீட்டர் உச்ச இழுவிசையை வழங்கும் சக்திவாய்ந்த 5.2 லிட்டர் V10 எஞ்சினைக் கொண்டுள்ளது.
மேலும் விராட் கோலி பயன்படுத்தும் காரில் மகுடம் சூட்டுவது ஆடி R8 V10 பிளஸ் ஆகும். இந்த ஸ்போர்ட்ஸ் கார் அதன் 5.2 லிட்டர் V10 எஞ்சினுக்கு பெயர் பெற்றது. இது 602 ஹெச்பி பவர் மற்றும் 560 நியூட்டன் மீட்டர் டார்க்கை உருவாக்குகிறது. இதன் விலை ரூ.2.72 கோடி ஆகும்.
கோலியின் வாகனங்களில் பென்ட்லி ஃப்ளையிங் ஸ்பர் உள்ளது. இதன் விலை சுமார் ரூ. 5.25 கோடி. பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்த சொகுசு செடான் நேர்த்தியான வடிவமைப்பையும் உயர் செயல்திறனையும் ஒருங்கிணைக்கிறது மற்றும் பிராண்டின் வரிசையில் கூட சிறப்பு வாய்ந்தது.
கடைசியாக பென்ட்லி கான்டினென்டல் ஜிடி ரூ.3.29 கோடிக்கு கிடைக்கிறது. இந்த மாடல் இரண்டு எஞ்சின் விருப்பங்களை வழங்குகிறது. 4.0 லிட்டர் V8 ட்வின்-டர்போ ஹைப்ரிட் எஞ்சின் மற்றும் 6.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு யூனிட்களில் கிடைக்கிறது. இவை இரண்டும் அதீத சக்தி மற்றும் காற்று மாசை குறைப்பது என இருவித பயன்களை வழங்குகிறது.






