என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
    • ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ புதிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது.

    அதேசமயம் இத்தொடர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் தேர்வுசெய்யப்பட்ட லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரே பர்கர், மயங்க் அகர்வால் மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோரை அணிகள் அடுத்த சீசனுக்கு தக்க வைக்க முடியும் என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

    முன்னதாக இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஃபிரேசர் மெக்குர்க் தொடரிலிருந்து விலகியதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
    • ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராவோ உள்ளிட்ட 4 பேர் இந்திய வர உள்ளனர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் வரும் 17-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17-ம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

    ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் வீரர்களான பிராவோ, ரசல், சுனில் நரைன், செப்பேர்ட் ஆகியோர் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர். இது குறித்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளரான பிராவோ வீடியோ வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனை வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு.
    • வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை முன்னிட்டு புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இளம் அணியை உருவாக்க விரும்புவதாகவும் அதற்காக அவர் சீனியர் வீரர்களை கழற்றி விட பிசிசிஐக்கு பரிந்துரை செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியது.

    இந்நிலையில் 2011 உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் இதேபோல சீனியர் வீரர்களை கழற்றி விட்ட இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் 8 படுதோல்விகளை சந்தித்தது. அதே போல விராட் கோலி, ரோகித் சர்மாவை வீட்டுக்கு அனுப்பியுள்ள இந்திய அணி அடுத்த இங்கிலாந்து தொடரில் தோல்வியை சந்திக்கும் என்று முன்னாள் வீரரும் யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    மிகப்பெரிய வீரரான விராட் கோலி ஓய்வு பெற்றது கண்டிப்பாக இந்தியாவுக்கு இழப்பு. 2011-ல் நிறைய சீனியர்கள் ஓய்வு பெற்றது, நீக்கப்பட்டது போன்ற விஷயங்களால் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. ஏனெனில் பேக்-அப் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. விராட், ரோகித்திடம் இப்போதும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளதாக நான் கருதுகிறேன்.

    நீங்கள் முழுமையாக இளம் வீரர்களை மட்டுமே வைத்து அணியை உருவாக்கினால் அது எப்போதும் கீழே விழும். இனியும் சாதிக்க எதுவுமில்லை என்று கருதி விராட் கோலி ஓய்வு பெற்றிருக்கலாம். வீரேந்திர சேவாக், ரோகித் சர்மா போன்றவர்கள் முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டனர்.

    அவர்களைப் போன்ற மகத்தான வீரர்கள் 50 வயது வரை விளையாடியிருக்க வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றதால் நான் சோகமடைந்துள்ளேன். ஏனெனில் தற்போது இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்த யாருமில்லை.

    என்று யோக்ராஜ் கூறினார்.

    • விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார்.
    • டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது.

    இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தார். அந்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி விடை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

    இவர் 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் இந்தியா 40 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. மொத்தத்தில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட்டை விட உலக கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

    இது பற்றி அவர் கூறியதாவது:-

    விராட் கோலியை பலரும் மிஸ் செய்வார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விட அவரை யாரும் மிஸ் செய்யப் போவதில்லை. விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார். டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது. விராட் கோலி அனைத்து கேப்டனும் தங்களுடைய அணியில் இருக்க விரும்பக்கூடிய வீரர். டெஸ்ட் கிரிக்கெட் அவரை மிஸ் செய்யும்.

    என்று விராட் கோலி கூறினார். 

    • வாடிகன் சிட்டியில் அமெரிக்காவை சேர்ந்த போப் லியோ பதவியேற்றார்.
    • போப் லியோவை சந்திக்க நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் வாடிகன் சென்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் காலிறுதியில் சின்னர் உடன் மோதுகிறார்.

    இந்நிலையில், வாடிகன் சிட்டியில் புதிதாகப் பதவியேற்ற அமெரிக்காவை சேர்ந்த போப் லியோவை, நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர் இன்று நேரில் சந்தித்தார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்னர், இது மிகப் பெரிய கவுரவும் என பதிவிட்டுள்ளார்.

    புதிய போப் லியோ டென்னிஸ் ரசிகர் என்பதும், 3 மாத தடைக்குப் பிறகு இத்தாலி ஓபன் தொடரில் சின்னர் களமிறங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.
    • இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத் முதல் சுற்றில் இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.

    பாங்காக்:

    தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தாய்லாந்தில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், அயர்லாந்தின் நாட் நூயென் உடன் மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 19-21, 21-9, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்தப் போட்டி சுமார் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.

    மற்றொரு போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷு ரஜாவத், இந்தோனேசிய வீரரிடம் தோல்வி அடைந்தார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • காலிறுதி சுற்றில் இத்தாலி வீராங்கனை பவுலினி வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, ரஷியாவின் டயானா ஷ்னைடர் உடன் மோதினார்.

    இதில் 7-6 (7-1) என முதல் செட்டை இழந்த பவுலினி, அடுத்த இரு செட்களை 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் ஐபிஎல் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    மும்பை:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து, ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூருவில் மோதுகின்றன. அடுத்த மாதம் 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில் டெல்லி அணியின் இடம்பெற்றிருந்த ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார். மீதமுள்ள ஐபிஎல் 2025 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து அவருக்கு பதிலாக வங்க தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார்.

    ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் ஆறு போட்டிகளில் விளையாடி, 9.17 என்ற மோசமான சராசரியில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • 4வது சுற்றில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

    ரோம்:

    இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-3 என வென்றார். 2வது செட்டை கச்சனாவ் 6-3 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை அல்காரஸ் 7-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-6 (7-3), 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் பில்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர்.
    • ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது.

    பஹல்காம் தாக்குதலால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் ஒருவார காலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமைகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஐ.பி.எல். தொடர் மீண்டும் தொடங்குவதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த எஞ்சியுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் டி.ஜே. இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது அவற்றில் பாடல்கள், DJ, பெண்கள் நடனம் என எதுவும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன். தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளனர். அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐபிஎல் போட்டிகளில் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

    என கவாஸ்கர் கூறினார்.

    • கோலி, ரோகித் டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டனர்.
    • இருவரும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் முன்னணி வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏ+ கிரேடில் ரூ.7 கோடி சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் அவர்கள் ஓய்வு பெற்று விட்டதால் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறார்கள். இதனால் அவர்களின் ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ. மறுபரிசீலனை செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாக இருவரும் ரூ. 5 கோடி சம்பளம் உள்ள ஏ அல்லது ரூ.3 கோடி சம்பளம் உள்ள பி கிரேடுக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியது.

    இந்நிலையில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ-யின் செயலாளர் தேவஜித் சைகியா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவர்களின் A+ கிரேடு ஒப்பந்தம் தொடரும். அவர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகவே உள்ளனர், அவர்களுக்கு A+ கிரேடு வசதிகள் அனைத்தும் கிடைக்கும்.

    இவ்வாறு பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.

    ×