என் மலர்
நீங்கள் தேடியது "foreign players"
- போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர்.
- மீண்டும் ஐபிஎல் போட்டி இன்று தொடங்குகிறது.
பெங்களூரு:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக் கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் தொடங்குகிறது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பெங்களூரு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். கொல்கத்தா தோற்றால் போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.
போர் சூழல் காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டபோது பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குள் மீண்டும் திரும்ப தயக்கம் காட்டினார்கள். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் கொடுத்த அழுத்தம் காரணமாக பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பி உள்ளனர்.
அதன்படி 57 வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் ஆடுகிறார்கள். மும்பை அணியில் 8 பேரும், குஜராத், பெங்களூரு தலா 7, கொல்கத்தா, ராஜஸ்தான் தலா 6, பஞ்சாப், ஐதராபாத், லக்னோ தலா 5, டெல்லி, சென்னை தலா 4 பேரும் ஐ.பி.எல்.லில் விளையாட இந்தியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.
இவர்களில் சிலர் தங்களது நாடுக்கான போட்டியில் பங்கேற்பதால் பிளே ஆப் சுற்றில் ஆட மாட்டார்கள்.
ஸ்டார்க், ஹசில்வுட், ஜோஸ் இங்கிலீஷ், ஸ்டோய்னிஸ், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண் உள்ளிட்ட சில வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.லில் மீண்டும் ஆடவில்லை.
மாற்று வீரர்களாக ஒப்பந்தமான பேர்ஸ்டோவ், முஷ்தாபிசுர் ரகுமான், குசால் மெண்டிஸ், ஜேமிசன், ரிச்சர்டு கிளீசன், வில் ஓ ரூர்க் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் ஆடுகிறார்கள்.
- வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம்.
- ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியா- பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இந்நிலையில் ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்குவதற்கு முன்பு பிசிசிஐ புதிய முடிவை எடுத்துள்ளது. இப்போது வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் அணிகள் தற்காலிக மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். ஆனால் தற்போது தேர்வுசெய்யும் வீரர்களை அடுத்த ஏலத்திற்கு முன்பு தக்கவைக்க முடியாது என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தொடர் முடியும் வரை தற்காலிக மாற்று வீரர்களை அணிகள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்றும் கூறிவுள்ளது.
அதேசமயம் இத்தொடர் இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் தேர்வுசெய்யப்பட்ட லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், நந்த்ரே பர்கர், மயங்க் அகர்வால் மற்றும் செதிகுல்லா அடல் ஆகியோரை அணிகள் அடுத்த சீசனுக்கு தக்க வைக்க முடியும் என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ஃபிரேசர் மெக்குர்க் தொடரிலிருந்து விலகியதை அடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முஸ்தஃபிசூர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
- மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது.
மும்பை:
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அந்த தொடருக்கு முன் மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதில் ஒவ்வொரு அணிகளும் ரீ-டெய்ன் செய்வதற்கான வீரர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இதற்கு முன்பாக இன்று ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அணியின் உரிமையாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில் ஐ.பி.எல். சீசனில் இருந்து கடைசி நிமிடத்தில் விலகும் வெளிநாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பி.சி.சி.ஐ.-யிடம் ஐ.பி.எல். அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் கடைசி நேரத்தில் அல்லது முக்கியமான கட்டத்தில் வெளிநாட்டு வீரர்கள் வெளியேறுவது வாடிக்காயாக உள்ளது. உதாரணமாக, போன ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதலில் தொடர் தோல்விகளை சந்தித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில் இருந்த போது, இங்கிலாந்து அணி வீரர் வில் ஜக் சிறப்பாக விளையாடினார்.
இதனால் அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து விளையாடி ஆர்சிபி அணிக்கு கோப்பையை பெற்று தருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பிளே ஆப் சுற்றில் விளையாடாமல் உடனே இங்கிலாந்து சென்று விட்டார். இப்படி பல வெளிநாட்டு வீரர்கள் கடைசி நேரத்தில் வெளியேறுவதை வழக்கமாக கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த கோரிக்கை உள்ளது.

















