என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் தொடரில் கோடிகளை வீணாக்கிய வெளிநாட்டு வீரர்கள்
Byமாலை மலர்22 May 2018 12:30 AM GMT (Updated: 22 May 2018 12:30 AM GMT)
ஐபிஎல் தொடரின் 11-வது சீசனில் பல்வேறு அணிகளால் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய 11 முக்கிய வெளிநாட்டு வீரர்களில் பற்றி பார்க்கலாம். #VIVOIPL #IPL2018
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டுயுள்ள இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்து விட்டன. பிளே-ஆப் சுற்றுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.
பிளே-ஆப் சுற்றின் முதல் போட்டியான குவாலிபையர் 1 ஆட்டத்தில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
இந்நிலையில், இந்த சீசனில் பல்வேறு அணிகளால் கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சொதப்பிய 11 முக்கிய வெளிநாட்டு வீரர்களில் பற்றி பார்க்கலாம்.
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் ஏலத்தில் அதிகமான தொகையான ரூ.12.50 கோடிக்கு எடுக்கப்பட்ட வீரர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடம் பெற்று இருந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு போட்டியில் கூட பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் முத்திரை பதிக்கவில்லை. 13 போட்டிகளில் களமிறங்கி பென் ஸ்டோக்ஸ் 136 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இவரின் ஒவ்வொரு ரன்னுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொடுத்த விலை ரூ.6.38 லட்சமாகும். 13 போட்டிகளில் 29 ஓவர்கள் பந்துவீசி 8 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார் பென் ஸ்டோக்ஸ். இவரின் ஓவர் எக்கானமி ரேட் 9 ரன்களாகும். பேட்டிங்கிலும் சராசரி 16 ரன்களாகும். பென் ஸ்டோக்ஸின் சொதப்பல் ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
பென் ஸ்டோக்ஸ்
கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெலின் பேட்டிங்கும், பந்துவீச்சும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒட்டுமொத்தமும் தலைகீழானது. சர்வதேச ஆல்ரவுண்டர் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு விலைக்கு வாங்கியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி. ஆனால் ஒரு போட்டியில் கூட மேக்ஸ்வெல் மேட்ச் வின்னராக அணிக்குத் திகழவில்லை என்பது வேதனையாகும். 12 போட்டிகளில் களமிறங்கிய மேக்ஸ்வெல் 169 ரன்கள் சேர்த்தார். சராசரியாக 14 ரன்களும், அதிகபட்சமாக 49 ரன்களாகும்.
கிளென் மேக்ஸ்வெல்
கிறிஸ் வோக்ஸ் (இங்கிலாந்து)
இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸ் இந்த முறை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். பெங்களூரு அணி ஏலத்தில் ரூ.7.60 கோடிக்கு வோக்ஸை ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டில் கொல்கத்தா அணியில் இடம்பெற்ற வோக்ஸ் 13 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால், நம்பி எடுத்த வோக்ஸை எடுத்த பெங்களூரு அணி மோசம் போனது. 5 போட்டிகளில் பங்கேற்ற வோக்ஸ் 17 ரன்கள் சேர்த்தால், 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றினார்.
கிறிஸ் வோக்ஸ்
ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலிய அணியின் மற்றொரு இளம் அதிரடி பேட்ஸ்மேன் ஆரோன் பிஞ்ச். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.6.2 கோடிக்கு ஏலத்தில் ஆரோன் பிஞ்சை ஏலத்தில் எடுத்தது. பேட்டிங்கில் எந்த வரிசையிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், முதல் இரு போட்டிகளிலும் தொடக்க வீரராக பிஞ்ச் களமிறக்கப்பட்டு, டக்அவுட்சில் தலைதெறிக்க ஓடினார். அதன்பின் நடுவரிசையில் களமிறக்கப்பட்டும் ஆரோன் பிஞ்ச் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இந்தத் தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய பிஞ்ச் 134 ரன்கள் சேர்த்தார். அதிகபட்சமாக 46 ரன்களும், சராசரியாக 16 ரன்களும் சேர்த்திருந்தார்.
ஆரோன் பிஞ்ச்
கெய்ரான் பொல்லார்ட் (மேற்கிந்திய தீவுகள்)
மேற்கிந்தியத்தீவுகள் வீரரான கெய்ரான் பொல்லார்ட் சிறந்த ஆல்ரவுண்டர். பொலார்டின் திடீர் அதிரடி பேட்டிங், விக்கெட் வீழ்த்தும் திறமை ஆகியவற்றுக்காக மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் இவரை 5.40 கோடி ரூபாய்க்கு தக்கவைத்தது. கடந்த சில ஐபிஎல் சீஸன்களாக சொதப்பி வந்த பொல்லார்டை இந்த முறை மும்பை அணி கழற்றிவிட்டு இருக்க வேண்டும். ஆனால், தக்கவைத்ததற்கு நல்ல தண்டனை கிடைத்தது. இந்த ஐபிஎல் சீசனில் கேப்டன் ரோகித் சர்மா பலமுறை பொலார்டுக்கு வாய்ப்பு கொடுத்தும் பேட்டிங்கில் சொதப்பினார். இதனால், 7 போட்டிகளோடு பொல்லார்டை கழற்றிவிட்டனர். இந்தத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய பொல்லார்ட் 76 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.
கெய்ரான் பொல்லார்ட்
டார்கி ஷார்ட் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான இவர், அங்கு நடந்த பிக் பாஷ் டி20 லீக்கில் சிறப்பாக விளையாடினார். ஹோபர்ட் ஹரிக்கன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அவர் 572 ரன்கள் குவித்து அசத்தினார். இதனால் இவரை ரூ.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. ஆனால், ராஜஸ்தான் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய ஷார்ட் இதுவரை 115 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 44 ரன்கள் எடுத்துள்ளார்.
டார்கி ஷார்ட்
பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான பிரண்டன் மெக்கல்லம் 3.60 கோடி ரூபாய்க்கு பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். கடந்த ஐபிஎல் போட்டிகளில் தனது அதிரடியான சதம், அரை சதங்களால் வெற்றியை எளிதாக்கிக் கொடுத்தவர், பிரண்டன் மெக்கல்லம். கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த மெக்கல்லம் இந்த முறை ஐபிஎல் போட்டியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தார். பெங்களூரு அணியில் விராட் கோலி, டீகாக், மெக்கல்லம், டிவில்லியர்ஸ் எனச் சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணியால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறி முடியவில்லை. மிகச்சிறந்த பேட்ஸ்மேனான மெக்கல்லம் 6 போட்டிகளில் களமிறங்கி 127 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதில் அதிபட்சம் 43 ரன்களாகும்.
பிரண்டன் மெக்கல்லம்
கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியினால் 2.2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் காயம் காரணமாக விலகியதை அடுத்து நியூசிலாந்து ஆல்ரவுண்டரான கோரி ஆண்டர்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். கோரி ஆண்டர்சனின் மோசமான பாஃர்மைப் பார்த்து நியூசிலாந்து அணியில் இடம்பெறாமல் இருந்தார். இருப்பினும் அவர் நன்றாக விளையாடுவார் என நம்பி ஆண்டர்சனை எடுத்த பெங்களூர் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 3 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற ஆன்டர்சன் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3 விக்கெட் வீழ்த்தினார்.
கோரி ஆண்டர்சன்
மிச்செல் ஜான்சன் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் மிட்ஷெல் ஜான்சன் பந்துவீச்சில் அனல் பறக்கும். அத்தகைய சிறந்த பந்துவீச்சாளர் இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை 2 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சுக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் ஜான்சன் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், 10 போட்டிகளில் பந்துவீசிய ஜான்சன் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். சராசரியா ஓவருக்கு 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
மிச்செல் ஜான்சன்
கொலின் முன்ரோ (நியூசிலாந்து)
நியூசிலாந்து வீரரான காலின் முன்ரோ சிறந்த தொடக்க ஆட்டக்காரர். இவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.1.90 கோடிக்கு விலைக்கு வாங்கியது. டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் 2-ம் இடத்தில் காலின் முன்ரோ இருப்பதால் மிகப்பெரிய பலமாக அணிக்கு இருப்பார் என்று டெல்லி அணி நினைத்தது. ஆனால், ஒரு போட்டியில் கூட முன்ரோ சோபிக்கவில்லை. 5 போட்டிகளில் களமிறங்கிய முன்ரோ 63 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதில் அதிகபட்சம் 33 ரன்களாகும்.
கொலின் முன்ரோ
இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா)
தென் ஆப்பிரிக்காவின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால், தொடக்கத்தில் ஒரு சில போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தாஹிர் அதன்பின் சொதப்பினார். இதனால் சிஸ்கே அணி இம்ரானை ஓரம் கட்டியது. 6 போட்டிகளில் விளையாடிய இம்ரான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இம்ரான் தாஹிர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X