என் மலர்
கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட் அவரை மிஸ் செய்யும்- கோலிக்கு மைக்கேல் கிளார்க் புகழாரம்
- விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார்.
- டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது.
இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர் ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தார். அந்த நிலையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலி விடை பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.
இவர் 68 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையில் இந்தியா 40 வெற்றிகளைப் பெற்று அசத்தியது. குறிப்பாக சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. மொத்தத்தில் வெற்றிகரமான இந்திய மற்றும் ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ள விராட் கோலி வரலாற்றின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி ஓய்வு பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட்டை விட உலக கிரிக்கெட்டுக்கு பெரிய இழப்பு என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
விராட் கோலியை பலரும் மிஸ் செய்வார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை விட அவரை யாரும் மிஸ் செய்யப் போவதில்லை. விராட் கோலி நீண்ட காலம் நம்முடைய கிரிக்கெட் விளையாட்டின் முகமாக இருந்தார். டெஸ்ட் போட்டிகள் மீது அவருடைய அன்பும் ஆர்வமும் அவர் அடித்த ரன்கள் போலவே அளப்பறியது. விராட் கோலி அனைத்து கேப்டனும் தங்களுடைய அணியில் இருக்க விரும்பக்கூடிய வீரர். டெஸ்ட் கிரிக்கெட் அவரை மிஸ் செய்யும்.
என்று விராட் கோலி கூறினார்.






