என் மலர்

  விளையாட்டு

  ருதுராஜ் கெய்க்வாட்
  X
  ருதுராஜ் கெய்க்வாட்

  கெய்க்வாட், அம்பதி ராயுடு அதிரடி... குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சிஎஸ்கே

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் துவக்க வீரர் கெய்க்வாட் 48 பந்துகளில், 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் உள்பட 73 ரன்கள் விளாசினார்.
  புனே:

  ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. 

  துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி  ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மறுமுனையில் உத்தப்பா(3 ரன்), மொயீன் அலி (1 ரன்) விரைவில் விக்கெட்டை இழந்தாலும், 4வது வீரராக களமிறங்கிய அம்பதி ராயுடு, கெய்க்வாட்டுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அணியின் ஸ்கோர் உயர்ந்தது. இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்டனர்.

  அம்பதி ராயுடு 46 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அரை சதம் கடந்து முன்னேறிய கெய்க்வாட் 73 ரன்களில் ஆட்டமிழந்தார். 48 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரி, 5 சிக்சர்கள் விளாசினார். 

  அதன்பின்னர் சிவம் துபே 19 ரன், கேப்டன் ஜடேஜா 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. 

  குஜராத் அணி தரப்பில் அல்சாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி, யாஷ் தயாள் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

  இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.
  Next Story
  ×