search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிசிசிஐ
    X
    பிசிசிஐ

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி எதிரொலி: இங்கிலாந்திடம் இரண்டு பயிற்சி ஆட்டம் கேட்கும் பிசிசிஐ

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என பிசிசிஐ இங்கிலாந்திடம் கேட்க இருக்கிறது.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாக உள்ளது.

    மேலும் ஐந்து போட்டிகள் என்பது நீண்ட நாட்கள் தொடராகும். இதனால் இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் வகையில் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் விரும்புகிறது.

    இதனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி டாம் ஹாரிசனிடம் இரண்டு பயிற்சி போட்டிக்கு ஏற்பாடு செய்யும்படி பேச இருக்கிறார்.


    ஐசிசி உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியடைந்தது. பயிற்சி ஆட்டம் ஏதும் இல்லாததால், இந்திய அணியால் நல்ல முறையில் போட்டிக்கு தயாராக முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.


    ஜெய் ஷா நேற்று இந்திய அணி நிர்வாகத்திடம் பேசியுள்ளார். அப்போது வீரர்களுக்கு கட்டாயம் பயிற்சி ஆட்டம் தேவை என அவர்கள் வலியுறுத்தியதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
    Next Story
    ×