என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம் வயதில் டெஸ்ட் அணி கேப்டன்: 8 நாள் வித்தியாசத்தில் உலக சாதனைப் படைத்த ரஷித் கான்
Byமாலை மலர்5 Sep 2019 10:42 AM GMT (Updated: 5 Sep 2019 10:42 AM GMT)
வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்டில் கேப்டனாக பதவி ஏற்றதன் மூலம், சர்வதேச அளவில் இளம் வயதில் கேப்டன் பதவியை பெற்ற வீரர் என்ற சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
வங்காள தேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சிட்டோகிராமில் இன்று தொடங்கியது. இதில் ரஷித் கான் முதன் முதலாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
ரஷித் கானுக்கு 20 வயது 350 நாட்கள்தான் ஆகிறது. இதன் மூலம் இளம் வயதில் டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் தைபு 20 வயது 358 நாட்களில் இலங்கை அணிக்கெதிராக கேப்டனாக பொறுப்பேற்றிருந்தார்.
தற்போது 8 நாட்கள் வித்தியாசத்தில் ரஷித் கான் தைபுவின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்துள்ளார்.
இந்தியாவிற்காக பட்டோடி 21 வயது 77 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்று சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்காக வக்கார் யூனிஸ் 22 வயது 15 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். ஸ்மித் 22 வயது 82 நாட்களில் கேப்டன் பதவியை ஏற்று சாதனைப் படைத்துள்ளார்.
Next Story
×