search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோவக் ஜோகோவிச்
    X
    நோவக் ஜோகோவிச்

    அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் - காயத்தால் வெளியேறினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்

    அமெரிக்க ஓப்பன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயத்தால் வெளியேறியதால், வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
    நியூயார்க்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
     
    இதில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்கொண்டார்.

    இதில் வாவ்ரிங்கா 6-4, 7-5, 2-1 என முன்னிலை பெற்றபோது, ஜோகோவிச்சுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து வாவ்ரிங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
    Next Story
    ×