search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாகிப் அல் ஹசன் மோர்தசா
    X
    ஷாகிப் அல் ஹசன் மோர்தசா

    கேப்டனின் மோசமான பார்ம் உலகக்கோப்பையில் பிரச்சனையாக அமைந்தது: ஷாகிப் அல் ஹசன்

    கேப்டன் மோர்தசா பார்ம் இன்றி சிறப்பாக விளையாடாதது உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய பாதகமாக அமைந்து விட்டது என ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் வங்காளதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் 9 போட்டிகளில் 10 விக்கெட்டுக்களுடன் 606 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்தார்.

    என்றாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடாததன் மூலம் வங்காளதேச அணியால் 8-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

    வங்காளதேச அணி 8-வது இடத்தை பிடிக்க, அணியின் கேப்டனின் மோசமான பார்ம்-தான் காரணம் என்று ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாகிப் அல் ஹசன் கூறுகையில் ‘‘உலகக்கோப்பையில் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதை நான் உறுதியாக நம்பினேன்.

    உலகக்கோப்பையில் நாங்கள் நினைத்த விஷயங்கள் நடக்கவில்லை. ஒரு வீரர் சிறப்பாக விளையாடாதபோது, அணி எப்படி விளையாடியது என்பதை காட்டிலும், தன்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

    இது உலகக்கோப்பையின்போது எங்களுக்கு பிரச்சனையாகியது. இதே விஷயம் மோர்தசாவுக்கு நடந்தது. கேப்டன் சிறப்பாக விளையாடாத போது, அவருக்கும் பிரச்சனை. அணிக்கும் பிரச்சனை. கேப்டன் சிறப்பாக விளையாட வேண்டும். அதற்கு மாற்று வழி ஏதும் கிடையாது’’ என்றார்.
    Next Story
    ×