search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவ்தீப் சைனி
    X
    நவ்தீப் சைனி

    நவ்தீப் சைனியை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தயார்படுத்தும் பிசிசிஐ

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாவிடிலும், வலைப்பயிற்சி பவுலராக இணைந்துள்ளார் நவ்தீப் சைனி.
    இந்தியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

    2019 சீசனில் சிறப்பாக பந்து வீசினார். குறிப்பாக சராசரியாக 140 கி.மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசி அசத்தினார். இதனால் உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு வலைப்பயிற்சியின்போது பந்து வீச அழைத்துச் செல்லப்பட்டார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்தார். டி20 கிரிக்கெட்டில் அசத்தினார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

    புவியுடன் நவ்தீப் சைனி

    இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை என்றாலும் வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசுவதற்காக அணியுடன் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

    இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘‘நவ்தீப் சைனி இந்திய அணியுடன் தங்கியிருப்பார். அவரை டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சாளராக வளர்க்க நிர்வாகம் விரும்புகிறது’’ என்று தெரிவித்தார்.

    இதன்மூலம் நவ்தீப் சைனி இந்திய டெஸ்ட் அணியுடனே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×