search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Navdeep saini"

    காம்பிரை பற்றி நினைத்தாலே எமோசன் ஆகிவிடுவேன் என்று மொகமது ஷமிக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்துள்ள சைனி கூறியுள்ளார்.
    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நாளைமறுநாள் (14-ந்தேதி) தொடங்குகிறது. இந்திய அணியில் மொகமது ஷமி உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்ததால் நவ்தீப் சைனி அணியில் இடம்பிடித்துள்ளார்.

    டெல்லி அணிக்காக விளையாடி வரும் சைனி, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு கம்பீர்தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். 2013-ம் ஆண்டு டெல்லி ரஞ்சி அணியின் வலைப் பயிற்சியின்போது பந்து வீசிய நேரத்தில், சைனியின் திறமையை பார்த்து காம்பீர் அவருக்கு பெரிய அளவில் உதவி  செய்துள்ளார்.



    காம்பீர் குறித்து சைனில் சைனி கூறுகையில் ‘‘கவுதம் காம்பிர் என்னிடம், டென்னிஸ் பந்தில் எப்படி பந்து வீசுவாயோ, அதேபோல் பந்து வீசவும். அப்படி வீசினால் சரியான இடத்தில் பந்து விழும் என்றார். அவர் சொன்னதுபோல் நான் செய்தேன். தற்போது இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு அவர்தான் காரணம். எப்போதெல்லாம் கவுதம் காம்பிர் பற்றி நினைத்தாலும் நான் எமோசன் ஆகிவிடுவேன். அது ஏன் என்று தெரியவில்லை’’ என்றார்.

    பிட்னஸ் டெஸ்டில் தோல்வியடைந்ததால் முகமது ஷமி ஆப்கானிஸ்தான் டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டு, சைனி சேர்க்கப்பட்டுள்ளார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் வருகிற 14-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பிடித்திருந்தார். அவருடன் இசாந்த் சர்மா, சர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பிடித்திருந்தனர்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பிட்னஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதில் முகமது ஷமி தோல்வியடைந்தார். இதனால் முகமது ஷமி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.



    அவருக்குப் பதிலாக நவ்தீப் சைனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 25 வயதாகும் சைனி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். 31 முதல்தர போட்டிகளில் 96 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அணியில் இடம்பிடித்துள்ள இவருக்கு ஆடும்லெவனில் இடம்கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
    ×