என் மலர்

  செய்திகள்

  கிறிஸ் கெய்ல்
  X
  கிறிஸ் கெய்ல்

  நான் எந்தவொரு ஓய்வு முடிவையும் அறிவிக்கவில்லை: கிறிஸ் கெய்ல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நான் எந்தவொரு ஓய்வு முடிவையும் அறிவிக்கவில்லை என்று ‘யுனிவர்ஸ் பாஸ்’ கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக கிறிஸ் கெய்ல் ‘45’ எண் பொறித்த ஜெர்சிதான் அணிந்து விளையாடுவார். ஆனால் நேற்று ‘301’ எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார். இது அவருக்கு 301-வது ஒருநாள் போட்டியாகும்.

  இதனால் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நேற்றைய ஆட்டத்தில் 41 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்து வெளியே செல்லும்போது இந்திய வீரர்கள் அவருக்கு சிறப்பான வகையில் வழியனுப்பி வைத்தனர். இதனால் நேற்று நடைபெற்றதுதான் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்று கருதப்பட்டது.

  ஆனால் நான் எந்தவொரு ஓய்வு முடிவு குறித்தும் அறிவிக்கவில்லை என்று வீடியோ மூலம் கிறிஸ் கெய்ல் விளக்கம் அளித்துள்ளார்.

  இதுகுறித்து கிறிஸ் கெய்ல் அந்த வீடியோவில் ‘‘நான் எந்தவொரு ஓய்வையும் அறிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும்வரை கிரிக்கெட்டில் வலம் வருவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×