என் மலர்

  செய்திகள்

  ஷ்ரேயாஸ் அய்யர்
  X
  ஷ்ரேயாஸ் அய்யர்

  டி20 தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஏமாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
  இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டி20 தொடருக்கான இந்திய அணியில் ரோகிர் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, குருணால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, லோகேஷ் ராகுல், ரிஷப் பந்த், ராகுல் சாஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.

  முதல் இரண்டு போட்டிகளில் ராகுல் சாஹர், தீபக் சாஹர், லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம் பெறவில்லை. நேற்று நடைபெற்ற கடைசி போட்டியில் ரோகித் சர்மா, கலீல் அகமது, ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ராகுல் சாஹர், தீபக் சாஹர், லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

  15 பேர் கொண்ட அணியில் 14 பேருக்கு வாய்ப்பு கிடைத்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு மட்டும் ஏமாற்றமே மிஞ்சியது. என்றாலும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஷ்ரேயாஸ் அய்யர் உள்ளார்.
  Next Story
  ×