search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ் கெய்ல்
    X
    கிறிஸ் கெய்ல்

    இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் கிறிஸ் கெய்ல்

    இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அதிரடி ஜாம்பவான் கிறிஸ் கெய்ல் இடம் பிடித்துள்ளார்.
    இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து தலா மூன்று டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரையிலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டி 8-ந்தேதிதியில் இருந்து 14-ந்தேதி வரையும் நடக்கிறது.

    ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பையுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்று கூறியிருந்த கிறிஸ் கெய்ல், அதன்பின் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

    14 வீரர்களை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்லுக்கு இடம் கிடைத்துள்ளது. ஒருவேளை இந்தத் தொடருடன் கெய்ல் ஓய்வு பெற வாய்ப்புள்ளது.

    இந்திய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஜேசன் ஹோல்டர், 2. ஜான் கேம்ப்பெல், 3. எவின்லிவிஸ், 4. ஷிம்ரோன் ஹெட்மையர், 5. நிக்கோலஸ் பூரன், 6. ராஸ்டன் சேஸ், 7. பேபியன் ஆலன், 8. கார்லஸ் பிராத்வைட், 9. கீமோ பால், 10. கிறிஸ் கெய்ல், 11. ஷெல்டன் காட்ரெல், 12. ஒஷானு தாமஸ், 13. ஷாய் ஹோப், 14. கீமர் ரோச்.
    Next Story
    ×