search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அஸ்வின் பந்தை விளாசும் காட்சி.
    X
    அஸ்வின் பந்தை விளாசும் காட்சி.

    டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல்

    டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 10-வது லீக் ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.
    திருநெல்வேலி:

    தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றது. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். ஹரி நிஷாந்த் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஜெகதீசன் 53 ரன்கள் அடித்து வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ரவி சந்திரன் அஸ்வின் தூத்துக்குடி வீரர்களின் பந்து வீச்சை சிதறடித்தார். அவர் 28 பந்துகளில் 3 சிக்சர்கள் உட்பட 52 ரன்கள் விளாசினார். இறுதியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.

    தூத்துக்குடி அணி தரப்பில் தமிழ் குமரேசன், மூர்த்தி மற்றும் செந்தில் நாதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தூத்துக்குடி அணி விளையாடி வருகிறது.
    Next Story
    ×