search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன்
    X
    இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஒல்லி ஸ்டோன்

    முதல் இன்னிங்சில் அயர்லாந்து 122 ரன்கள் முன்னிலை: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுக்குமா?

    லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து 85 ரன்களில் சுருண்ட நிலையில், அயர்லாந்து முதல் இன்னிங்சில் 207 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆகியுள்ளது.
    இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணியின் முர்டாக் ஐந்து விக்கெட்டும், அடைர் 3 விக்கெட்டும் வீழ்த்த, 23.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 85 ரன்னில் சுருண்டது.

    பின்னர் அயர்லாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டினாலும் அதன்பின் வந்த வீரர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அயர்லாந்து முதல் இன்னிங்கில் 207 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது . அத்துடன் நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட், ஒல்லி ஸ்டோன், சாம் குர்ரான் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தனர். அயர்லாந்து பேட்ஸ்மேன் பால்பிர்னி 55 ரன்கள் சேர்த்தார்.

    தாம்சன் க்ளீன் போல்டாகிய காட்சி

    தற்போதுவரை இங்கிலாந்து 122 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டினால் மட்டுமே வெற்றி வாய்ப்பை நெருங்க முடியும். ஒருவேளை முதல் இன்னிங்ஸ் போல் விக்கெட்டை இழந்தால் தோல்வியை சந்திக்க நேரிடும்.
    Next Story
    ×