search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டூவர்ட் பிராட்"

    • மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி வீரர் மயங்க் யாதவ் மற்றும் விராட் கோலி மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

    மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். பந்து வீச்சில் அசத்தி வரும் மயங்க் அகர்வாலும் பேட்டிங்கில் கிங்காக இருக்கும் விராட் கோலியும் மோதுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    • பிராட் என்னுடைய சிறந்த நண்பர்.
    • அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார்.

    லண்டன்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

    ஸ்டூவர்ட் பிராட் குறித்து ஆண்டர்சனிடம் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஆண்டர்சன் கண்ணீர் விட்டு அழுதார்.

    பின்னர் பேசிய ஆண்டர்சன், பிராட் என்னுடைய சிறந்த நண்பர். அவர் பல வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் எப்போதுமே எனக்காக உறுதுணையாக இருந்திருகிறார் என்று கூறி கொண்டே அழுகையை அடக்க முடியாமல் ஆண்டர்சன் பேசாமல் சென்றுவிட்டார். இதை பார்க்கும் போது மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது.


    இதனை பார்த்த ரசிகர்கள் ஆண்களும் அழுவார்கள். தங்களுடைய நண்பர்களுக்காக என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இதே போன்று பிராட் இன்னும் 2 ஆண்டுகள் விளையாடி இருந்தால், முரளிதரன் அல்லது குறைந்தபட்சம் ஆண்டர்சன் சாதனையாவது முறியடித்து இருப்பார் என்றும், ஆனால், ஆண்டர்சனின் சாதனையை முறியடிக்க கூடாது என்பதற்காக பிராட் இப்படி செய்து இருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்தார்.
    • உங்களுடைய அபாரமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி விட்ட அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் டெஸ்ட் உள்பட அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஸ்டூவர்ட் பிராட் திடீரென அறிவித்தார்.

    அவரது ஓய்வு முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உங்களுடைய அபாரமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஸ்டூவர்ட் பிராட். மிகச்சிறந்த மற்றும் மிகவும் அஞ்சப்படும் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் ஒருவர். உண்மையான ஜாம்பவான். உங்கள் பயணமும், உறுதியும் மிகவும் ஊக்கமளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.
    • இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்.

    இங்கிலாந்தின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். இவர், ஆஷஸ் டெஸ்டின் 5வது மற்றும கடைசி போட்டியில் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், ஆஷஸ் டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஓய்வு பெறவுள்ளதாக ஸ்டூவர்ட் பிராட் அறிவித்துள்ளார்.

    இதன்மூலம், 17 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஸ்டூவர்ட் விடைபெறுகிறார்.

    தனது ஓய்வு குறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறியதவாது:-

    இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் இங்கிலாந்து பேட்ஜ் அணிந்திருப்பது ஒரு பெரிய பாக்கியம்.

    மேலும், நான் எப்போதும் போல் கிரிக்கெட்டை நேசிக்கிறேன். தற்போதைய ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான தொடராக இருந்தது.

    இத்தொடரில் ஒரு பகுதியாக நானும் இருந்ததில் மகிழ்ச்சி. ஆஷஸ் தொடர் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தது.

    சில வாரங்களாகவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். எனக்கு ஆஷஸ் தொடர் மீது தீராக்காதல்.

    அதனால்தான் எனது கடைசி போட்டி ஆஷசில் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன்.

    நேற்று இரவு ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரிடம் எனது ஓய்வு முடிவை கூறினேன்.

    உண்மையைச் சொல்வதானால், இது சரியான நேரம் என்று உணர்ந்ததால் இப்போதே ஓய்வு பெற விரும்புகிறேன்

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக ஓய்வு அறிவித்த ஸ்டூவர்ட் பிராட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையில் அணிவகுத்து நின்றனர்.

    அப்போது, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் தனது நீண்ட கால பந்துவீச்சு கூட்டாளியான ஆண்டர்சனையும் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

    அவர்கள் களத்தில் இறங்கியபோது, பிராட் ஆண்டர்சனை ஒரு பக்கமாக அணைத்து, மரியாதையின் போது அவரையும் அழைத்துச் சென்றார்.

    ஆண்டர்சன் எல்லைக் கோட்டிற்குப் பின்னால் நின்று பிராட் தனது தருணத்தை ரசிக்க வைத்தார்.

    • லபுசேன் பேட்டிங் செய்தபோது ஸ்டூவர்ட் பிராட் பெய்ல்ஸை மாற்றி வைத்தார்
    • அதன்பின் லபுசேன் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    2-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன் களம் இறங்கினார். 43-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வீசி முடித்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் ஸ்டம்ப் அருகில் சென்று இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். இதை பார்த்த லபுஸ்சேன் புன்னகை உதிர்த்து, அடுத்த பந்தை சந்திக்க தயாரானார்.

    என்ன ஆச்சர்யம்... அடுத்த பந்தில் லபுஸ்சேன் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    அதற்குபின், ஸ்மித் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு ரன்களுக்கு ஓடியபோது, பேர்ஸ்டோவ் பந்தை பிடித்து ஸ்டம்பை தாக்கினார். அப்போது ஸ்மித் கிரீஸ்க்கு சற்று வெளியே நின்றிருந்தார். ஆனால், பெய்ல் ஸ்டம்பில் இருந்து விலகாமல் இருந்ததால் ரன்அவுட்டில் இருந்து தப்பினார்.

    இதனால் அவுட்டில் இருந்து தப்பிய ஸ்மித், 71 ரன்கள் சேர்த்தார். இது அவுட்டா? இல்லையா? என டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஸ்மித் அவுட்டில் இருந்து தப்பியதால் ஆஸ்திரேலியா 295 ரன்கள் சேர்த்து, 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது போட்டி மழையினால் டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார்.
    • ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 283 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 293 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

    இதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் அவர் ஆஷஸ் தொடரில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

    அவர் ஆஷஸ் தொடரில் 40 போட்டிகளில் விளையாடி 151 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் வார்னே 36 போட்டிகளில் 195 விக்கெட்டும், ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் 30 போட்டிகளில் 157 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர்.

    • முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது.
    • பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது.

    இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்த போட்டியின், முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 83 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் முதலாவதாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி தலா 32 மற்றும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

    இதில், பிராட் வீசிய பந்தில் கவாஜா அவுட்டானதை அடுத்து, ஸ்டுவர்ட் பிராட் தனது 599வது விக்கெட்டை வீழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், பிராட் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முயற்சித்தபோது, அந்த பந்து ஜோ ரூட்டிடம் கேட்சாக மாறியது.

    இதன்மூலம், பிராட் தனது 166வது டெஸ்டில் முதல் இன்னிங்சின் 50வது ஓவரில் 600வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது வீரர் என்ற சாதனையை ஸ்டுவர்டு பிராட் படைத்துள்ளார்.

    • இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் 895 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
    • ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் 580 விக்கெட்களுடன் 5-வது இடத்தில் இருக்கின்றனர்.

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் மாங்கானுவில் நேற்று தொடங்கியது.

    முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். அதிர்ச்சிகரமாக ஜாக் கிராவ்லி 4 ரன்களில் வெளியேற, பென் டக்கெட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 68 பந்துகளில் 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களில் 9 விக்கெட்க்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    நியூசிலாந்து அணி சார்பில் நீல் வாக்னெர் 4 விக்கெட்களும், டிம் சவுதி மற்றும் ஸ்காட் குக்கலைன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தனர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் லாதமை 1 ரன்னில் ஆலி ராபின்சன் வெளியேற்ற, கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்சை வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அடுத்ததாக நீல் வாக்னரை ஸ்டூவர்ட் பிராட் 27 ரன்களில் அவுட் செய்ய இது உலக சாதனையாக அமைந்தது.

    இந்த விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் டெஸ்ட் வரலாற்றில் 1,000 விக்கெட்களை வீழ்த்திய இரண்டாவது பௌலிங் பார்ட்னட்ஷிப் ஆனார்கள்.

    இதற்கு முன்னதாக, ஆஸ்திரேலிய ஜாம்பவான்களான கிளென் மெக்ராத் மற்றும் ஷேன் வார்னே 104 போட்டிகளில் இணைந்து 1,001 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். இன்னும் இரண்டு விக்கெட்களை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினால், பார்ட்னர்ஷிப் அமைத்து டெஸ்டில் அதிக விக்கெட்களை வீழ்த்திய பெருமையை இந்த ஜோடி பெறும்.

    இலங்கையின் முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் 895 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் கர்ட்லி ஆம்ப்ரோஸ் மற்றும் கோர்ட்னி வால்ஷ் 762 விக்கெட்களுடன் 4-வது இடத்திலும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் 580 விக்கெட்களுடன் 5-வது இடத்தில் இருக்கின்றனர்.

    • ஸ்டூவர்ட் பிராட் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.
    • இந்த ஜோடி 2021 புத்தாண்டு தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருமணத்திற்கு முன்பே தந்தையானார் ஸ்டூவர்ட் பிராட்வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இந்த மகிழ்சியான செய்தியை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில், மோலி கிங் தனது மகளின் நெற்றியில் முத்தமிடுவதும், பிராட் மகளின் கன்னங்களில் முத்தமிடுவது போன்ற புகைப்படங்கள் இருந்தது. குழந்தையின் பெயரையும் இந்த ஜோடி அறிவித்துள்ளது. உலகிற்கு வரவேற்கிறோம் அன்னபெல்லா பிராட். நாங்கள் ஒருபோதும் இவ்வளவு காதலித்ததில்லை என்று பதிவின் தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.


    மோலி கிங் மற்றும் பிராட் 2012 முதல் காதலித்து 2021 புத்தாண்டு தினத்தன்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்டூவர்ட் பிராட் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார்.

    • இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.
    • 2-வது இன்னிங்சில் பிராட் மொத்தம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    லண்டன்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றது. இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 36.2 ஓவரில் 118 ரன்னில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 158 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 169 ரன்னில் சுருண்டது. இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

    4-ம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 97 ரன்கள் எடுத்துள்ளது. இன்று இறுதி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் 2-வது இன்னிங்சில் கேப்டன் டீன் எல்கரின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் வீழ்த்தினார்.

    இந்த விக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்டின் 564-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிகெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

    இதுவரை 2-வது இடத்தில் இருந்த கிளென் மெக்ராத்தை (563 விக்கெட்) பின்னுக்கு தள்ளினார். இந்த இன்னிங்சில் பிராட் மொத்தம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் விவரம்:-

    முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்

    ஷேன் வார்னே - 708 விக்கெட்

    ஜேம்ஸ் ஆண்டர்சன் - 667 விக்கெட்

    அனில் கும்ப்ளே - 619 விக்கெட்

    ஸ்டூவர்ட் பிராட் - 566 விக்கெட்

    கிளென் மெக்ராத் - 563 விக்கெட்

    • ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிராட் பெற்றுள்ளார்.
    • ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    லண்டன்:

    இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் மைதானத்தில் நடந்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 45 ஓவர்களில் 165 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தென்ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணி 89.1 ஆவர்களில் 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

    இதையடுத்து 2-வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 37.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் (லார்ட்ஸ்) 100 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிராட் பெற்றுள்ளார்.

    மேலும் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய இரண்டாவது வேக பந்துவீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் மூன்று வெவ்வேறு மைதானங்களில் சாதித்துள்ளார். அவர் கொழும்பு (156), கண்டி (117), மற்றும் காலி (111) மைதானத்தில் இந்த சாதனையை படைத்துள்ளார். மற்றொரு இலங்கை ஜாம்பவானான ரங்கனா ஹார்த் காலேயில் 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    • ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார்.
    • டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 338 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று 2-நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    இந்த டெஸ்டில் பல்வேறு சாதனைகள் அரங்கேறியது. ஜடேஜா-பண்ட் ஆகியோர் சாதனைகள் படைத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவும் தனது பங்கிற்கு பேட்டிங்கில் ஒரு சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.

    ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84 ஓவரில் 35 ரன்கள் விட்டு கொடுத்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை பிராட் படைத்துள்ளார்.

    இதேபோல் 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையில் பிராட் வீசிய ஓவரில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் 36 ரன்கள் குவித்தார். இந்த பந்து வீச்சு டி20 வரலாற்றில் மோசமான சாதனையாக பதிவு செய்யப்பட்டது. அதே பாணியில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் பிராட் அதிக ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார்.

    ×