search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashes Series 2023"

    • லபுசேன் பேட்டிங் செய்தபோது ஸ்டூவர்ட் பிராட் பெய்ல்ஸை மாற்றி வைத்தார்
    • அதன்பின் லபுசேன் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்

    இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 2-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது.

    2-வது விக்கெட்டுக்கு மார்னஸ் லபுசேன் களம் இறங்கினார். 43-வது ஓவரை மார்க் வுட் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வீசி முடித்த நிலையில், ஸ்டூவர்ட் பிராட் ஸ்டம்ப் அருகில் சென்று இரண்டு பெய்ல்ஸை எடுத்து சற்று பார்த்த பின், இரண்டையும் மாற்றி வைத்தார். இதை பார்த்த லபுஸ்சேன் புன்னகை உதிர்த்து, அடுத்த பந்தை சந்திக்க தயாரானார்.

    என்ன ஆச்சர்யம்... அடுத்த பந்தில் லபுஸ்சேன் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    அதற்குபின், ஸ்மித் 42 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு ரன்களுக்கு ஓடியபோது, பேர்ஸ்டோவ் பந்தை பிடித்து ஸ்டம்பை தாக்கினார். அப்போது ஸ்மித் கிரீஸ்க்கு சற்று வெளியே நின்றிருந்தார். ஆனால், பெய்ல் ஸ்டம்பில் இருந்து விலகாமல் இருந்ததால் ரன்அவுட்டில் இருந்து தப்பினார்.

    இதனால் அவுட்டில் இருந்து தப்பிய ஸ்மித், 71 ரன்கள் சேர்த்தார். இது அவுட்டா? இல்லையா? என டுவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. ஸ்மித் அவுட்டில் இருந்து தப்பியதால் ஆஸ்திரேலியா 295 ரன்கள் சேர்த்து, 12 ரன்கள் முன்னிலை பெற்றது.

    ஆஷஸ் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது போட்டி மழையினால் டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் இங்கிலாந்து தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×