என் மலர்

  செய்திகள்

  தூத்துக்குடி அணி வீரர் பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் காட்சி
  X
  தூத்துக்குடி அணி வீரர் பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் காட்சி

  டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற 125 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தூத்துக்குடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் வெற்றிபெற 125 ரன்களை தூத்துக்குடி அணி இலக்காக நிர்ணயத்தது.
  திண்டுக்கல்:

  தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணியை தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் எதிர் கொண்டது. டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

  இதையடுத்து, தொடக்க வீரர்களாக அந்த அணியின் ஸ்ரீனிவாசன் மற்றும் விக்டர் களமிறங்கினர். விக்டர் 1 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் சிவா 28 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்ரீனிவாசன் அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

  பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் மதுரை அணி வெற்றி பெற 125 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதுரை பாந்தர்ஸ் தரப்பில் அந்த அணியின் கிரன் மற்றும் மிதுன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.     
  Next Story
  ×