search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலீல் அகமது ஷ்ரேயாஸ் அய்யர்
    X
    கலீல் அகமது ஷ்ரேயாஸ் அய்யர்

    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை 125-ல் சுருட்டி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா ‘ஏ’

    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ‘ஏ’ அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் உள்ளூர் நேரப்படி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க திணறினார்கள். தொடக்க வீரர்கள் கெய்க்வார்டு 3 ரன்களும், ஷுப்மான் கில் 10 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் சிறப்பாக விளையாடி 107 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார். ஹனுமா விஹாரி 63 பந்தில் 34 ரன்கள் சேர்க்க இந்தியா ஏ அணி 48.5 ஓவரில் 190 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் அகீம் ஜோர்டான் 3 விக்கெட்டும், ராஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி களம் இறங்கியது.

    இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 9.1 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து 30 ரன்களே சேர்த்தது. அதன்பின் வந்த கார்ட்டர், ஆர். பொவேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    பொவேல் 40 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ 95 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 125 ரன்னில் சுருண்டது. கார்ட்டர் 41 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

    இந்திய அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும் ராகுல் சாஹர், அக்சார் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.
    Next Story
    ×