search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலீல் அகமது"

    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    இதில் 1. ரோகித் சர்மா, 2.தவான், 3. லோகேஷ் ராகுல், 4. விராட் கோலி, 5. ரிஷப் பந்த்,  6. தினேஷ் கார்த்திக், 7. குருணால் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10, புவனேஸ்வர் குமார், 11. பும்ரா, 12. கலீல் அகமது ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.



    இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் கலீல் அகமதிற்கு இடம் கிடைக்காது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் குருணால் பாண்டியா அல்லது சாஹல் ஆகியோரின் ஒருவருக்கு இடம் கிடைக்காது.
    ஆசிய கோப்பை பரிசளிப்பு விழாவின்போது வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்குமாறு ரோகித் சர்மாவை டோனி கேட்டுக்கொண்டார் என்று கலீல் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்ற ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்றது.

    இந்தியா - வங்காள தேசம் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது இடம் பிடித்திருந்தார். பரிசளிப்பு விழாவின்போது ஆசிய கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா வாங்கியதும், உடனடியாக கலீல் அகமது கையில் கொடுத்தார். கலீல் அகமது உற்சாக மிகுதியால் கோப்பையை தூக்கி காண்பித்து சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.



    அறிமுக தொடரை இந்தியா கைப்பற்றியதில் அவருக்கு எல்லையிலா மகிழ்ச்சி. அத்துடன் கோப்பையை வாங்கியதும் அதைவிட மகிழ்ச்சி. நான் மிகவும் இளம் வீரர் மற்றும் எனக்கு தொடக்க தொடர் என்பதால் டோனிதான் ரோகித் சர்மாவிடம் கோப்பையை என்னிடம் வழங்குமாறு கூறினார் என்ற நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

    இதுகுறித்து கலீல் அகமது கூறுகையில் ‘‘வெற்றிக் கோப்பையை என்னிடம் வழங்கி இருவரும் கோப்பையை பெறுமாறு ரோகித் சர்மாவிடம் டோனி கேட்டுக்கொண்டார். ரோகித் சர்மா என்னிடம் கோப்பையை வழங்கினார்.

    ஏனென்றால், நான்தான் அணியில் இளம் வீரர். மேலும், இது என்னுடைய அறிமுக தொடர். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்’’ என்றார்.
    ×