என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
50 ஓவர் வரை ஆட வேண்டும் - டோனிக்கு தெண்டுல்கர் ஆதரவு
Byமாலை மலர்4 July 2019 8:22 AM GMT (Updated: 4 July 2019 8:22 AM GMT)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் டோனி 50 ஓவர் வரை களத்தில் நீடித்து ஆட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
பர்மிங்காம்:
உலகக்கோப்பை விளையாடும் முன்னாள் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மந்தமாக ஆடியது தொடர்பாக டோனியை கிரிக்கெட் சகாப்தமான தெண்டுல்கர் விமர்சனம் செய்து இருந்தார். அவர் இன்னும் வேகமாக ஆடி இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
இதே போல இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் டோனி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடாமல் மிதமான ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் இந்திய அணி போராடாமல் தோல்வியை தழுவியது. இது குறித்து டோனி மீது விமர்சனம் எழுந்தது.
வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் டோனியால் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆட முடியாமல் போனது. ஆனாலும் அவர் களத்தில் இருந்தால் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தும் திறமை வாய்ந்தவர் என்ற கருத்தும் இருக்கிறது.
இந்த நிலையில் டோனிக்கு தெண்டுல்கர் திடீரென ஆதரவு தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டோனி களத்தில் நின்று விளையாடுவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. அணிக்கு என்ன தேவை என்பதை அவர் சரியாக அறிந்து வைத்திருந்தார். 50 ஓவர் வரை அவர் களத்தில் நீடித்து இருக்க வேண்டும். இது மற்ற வீரர்களுக்கு உதவியாக இருக்கும். எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அவர் பூர்த்தி செய்யக்கூடியவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலககோப்பை போட்டி யோடு டோனி ஓய்வு பெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Next Story
×