search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்
    X

    பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள்

    பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததையடுத்து பாகிஸ்தான் மூத்த வீரரான சோயிப் மாலிக், ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
    உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது.

    இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.



    இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது.

    இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது.  இதனையடுத்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும்,  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் கூறியதாவது:



    வீரர்களின் சார்பில் ஊடகங்களிடம் கோரிக்கை ஒன்றை விடுக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள்.

    மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாரையும் மோசமாக நடத்தக் கூடாது. அது சரியானதும் அல்ல. நாங்கள் ஓட்டலில் சாப்பிடும் காட்சியின் உண்மை தன்மையை யாரும் உணரவில்லை.

    அந்த புகைப்படங்கள் 13ம் தேதி எடுக்கப்பட்டவை. போட்டிக்கு முன்தினம் நாங்கள் எங்கும் செல்லவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் நாட்டுக்காக விளையாடுகிறேன்.

    இப்போது ரசிகர்கள் பேசுவதை கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக நான் விளக்கம் தருவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×