search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்
    X

    அவரது பந்து வீச்சை ஏதிர்கொள்ளவே முடியாது - மனம் திறந்த யுவராஜ்

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்தவரும் சிறந்த ஆல்-ரவுண்டருமான யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவை கடந்த ஜூன் 10-ம்தேதி அறிவித்தார்.

    இந்நிலையில் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தான் சந்தித்த மிகவும் அபாயகரமான பந்து வீச்சாளர்கள் குறித்து யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிகழ்சியில் யுவராஜ் சிங் கூறியதாவது:-

    உலகில் உள்ள அனைத்து கிரிக்கெட் அணிகளுடனும் விளையாடியுள்ளேன். பல்வேறு அணி வீரர்களின் பந்து வீச்சினை ஏதிர் கொண்டுள்ளேன். ஆனால் இலங்கை அணியின் முன்னாள் வீரரும் சுழற்பந்து ஜாம்பவானுமான முத்தையா முரளிதரனின் பந்தினை ஏதிர்கொள்வது என்பது எப்போதுமே மிகவும் கடினமாக இருந்தது. அவரைப் போலவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்தின் பந்து வீச்சையும் எதிர்கொள்ளவே முடியாது.



    நான் பார்த்து மிகவும் பிரம்மித்த வெளிநாட்டு பேட்ஸ்மேன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். அவரது பேட்டிங் திறமை ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருந்தது. அவரை போலவே மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரது ஆட்டமும் என்னை பிரம்மிக்க வைத்தது.

    இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.
    Next Story
    ×