search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    254 ரன்களுடன் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பி: 8 விக்கெட்டுடன் இம்ரான் தாஹிர் பர்பிள் தொப்பி
    X

    254 ரன்களுடன் டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பி: 8 விக்கெட்டுடன் இம்ரான் தாஹிர் பர்பிள் தொப்பி

    மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் மற்றும் சதத்துடன் 254 ரன்கள் குவித்துள்ள டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். #IPL2019
    ஐபிஎல் தொடரில் இதுவரை ஒவ்வொரு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் மோதியுள்ளன. இதில் மூன்று பேர் சதம் அடித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் வார்னர் இரண்டு அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 254 ரன்கள் குவித்து முதல் இடம் பிடித்துள்ளார். இதனால் அரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

    அதே அணியின் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேன் பேர்ஸ்டோவ் ஒரு சதத்துடன் 198 ரன்கள் சேர்த்து 2-வது இடம்பிடித்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐதராபாத்தின் அந்த்ரே ரஸல் ஒரு அரைசதத்துடன் 163 ரன்கள் சேர்த்து 3-வது இடம் பிடித்துள்ளார். நேற்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஆர்சிபி போட்டிக்கு முன் ரஸல்தான் ஆரஞ்சு தொப்பியை வைத்திருந்தார். தற்போது டேவிட் வார்னர் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சஞ்சு சாம்சன் ஒரு சதத்துடன் 140 ரன்களுடன் 4-வது இடத்திலும், கிறிஸ் கெய்ல் 139 ரன்களுடன் 5-வது இடத்திலும், நிதிஷ் ராணா 132 ரன்களுடன் 6-வது இடத்திலும், பிரித்வி ஷா ஒரு அரைசதத்துடன் 130 ரன்கள் எடுத்து 7-வது இடத்திலும் உள்ளனர். மயாங்க் அகர்வால் (123) 8-வது இடத்திலும், ராபின் உத்தப்பா (115) 9-வது இடத்திலும், ரிஷப் பந்த் (114) 10-வது இடத்திலும் உள்ளனர்.



    பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் 3 போட்டியில் 6 விக்கெட் கைப்பற்றி பர்பிள் தொப்பியை கைப்பற்றியுள்ளார். சாஹல், பிராவோ தலா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முறையே 2 மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.

    ரபாடா, ரஸல் தலா ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி முறையே 4-வது மற்றும் 5-வது இடத்தை பிடித்துள்ளனர். ஆர்சிபி-க்கு எதிராக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முகமது நபி 6-வது இடத்திலும், பும்ரா (4) 7-வது இடத்திலும், சந்தீப் சர்மா (4) 8-வது இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் (4) 9-வது இடத்திலும், தீபக் சாஹர் (3) 10-வது இடத்திலும் உள்ளனர்.
    Next Story
    ×