search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் சதத்தால் ஆர்சிபி-க்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
    X

    பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் சதத்தால் ஆர்சிபி-க்கு 232 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

    பேர்ஸ்டோவ், டேவிட் வார்னர் சதம் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு 232 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத். #IPL2019 #SRHvRCB
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக பேர்ஸ்டோவ் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் பந்தை சிக்சருக்கும், பவுண்டரிக்குமாக பறக்க விட்டார்.



    4.5 ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 50 ரன்னைத்தொட்டது. 9-வது ஓவரை அறிமுக வீரர் பர்மன் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் அரைசதத்தை தொட்டர். 9.4 ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 100 ரன்னைக் கடந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் 52 பந்தில் தனது முதல் சத்தை பதிவு செய்தார். மறுமுனையில் விளையாடிய வார்னர் 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

    அணியின் ஸ்கோர் 185 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. பேர்ஸ்டோவ் 56 பந்தில் 12 பவுண்டரி, 7 சிக்சருடன் 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்தபின்னர் வார்னர் மின்னல் வேகத்தில் ரன்குவிக்க தொடங்கினார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் 17.2 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.


    டேவிட் வார்னர்

    கடைசி ஓவரின் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டேவிட் வார்னர் சதம் அடித்தார். பேர்ஸ்டோவ், வார்னர் ஆகியோரின் சதத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 55 பந்தில் தலா ஐந்து பவுண்டரி, சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
    Next Story
    ×