search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.40 கோடி நிலுவை தொகை பாக்கி - கட்டுமான நிறுவனம் மீது டோனி வழக்கு
    X

    ரூ.40 கோடி நிலுவை தொகை பாக்கி - கட்டுமான நிறுவனம் மீது டோனி வழக்கு

    ரூ.40 கோடி நிலுவை தொகையை வழங்க கோரி கட்டுமான நிறுவனத்துக்கு எதிராக டோனி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். #MSDhoni
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அம்ரபாலி கட்டுமான நிறுவனம் இருக்கிறது.

    இந்த நிறுவனத்தின் விளம்பர தூதுவராக கிரிக்கெட் வீரர் டோனி ஒப்பந்தம் செய்யப்பட்டார். டோனியை வைத்து அந்த கட்டுமான நிறுவனம் தனது பெயரை உச்சத்துக்கு கொண்டு சென்றது.

    இதற்கிடையே அம்ரபாலி நிறுவனம் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மக்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்தது. மேலும் அந்த நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. முறைகேடு உள்பட பல்வேறு பிரச்சினை காரணமாக டோனி அந்த நிறுவனத்தில் இருந்து விலகினார்.

    7 ஆண்டுகள் விளம்பர தூதராக இருந்த அவர் 2016-ம் ஆண்டு அம்ரபாலி நிறுவனத்துடன் தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

    ஒப்பந்தம் செய்தபடி அந்த நிறுவனம் டோனிக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்தது. இதை தொடர்ந்து நிலுவை தொகையை வழங்க கோரி அவர் கடந்த ஆண்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த நிலையில் அம்ர பாலி நிறுவனத்துக்கு எதிராக டோனி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

    தனக்கு வழங்க வேண்டிய ரூ.38.95 கோடி நிலுவை தொகையை அம்ரபாலி நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அவர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

    22.53 கோடி அசல் தொகையும், ரூ.16.42 கோடி வட்டியையும் வழங்க வேண்டும் என்று கோரி அவர் வழக்கை தொடுத்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்துடன் டோனி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகலையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார். #MSDhoni
    Next Story
    ×