search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு எதிராக முதல் 10 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் போதும்: மிட்செல் சான்ட்னெர்
    X

    இந்தியாவிற்கு எதிராக முதல் 10 ஓவர்கள் தாக்குப்பிடித்தால் போதும்: மிட்செல் சான்ட்னெர்

    இந்தியாவிற்கு எதிராக முதல் 10 ஓவரில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டால், எங்களால் அதிக ரன்கள் குவிக்க இயலும் என்று மிட்செல் சான்ட்னெர் தெரிவித்துள்ளார். #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களான தவான், ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் முதல் 10 ஓவரில் தங்களது துள்ளியமான பந்து வீச்சை வெளிப்படுத்தினர்.

    இந்நிலையில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால், இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களை வெளியேற்றிவிட்டார்கள் என்று நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மிட்செல் சான்ட்னெர் தெரிவித்துள்ளார்.

    நாளை 4-வது போட்டி நடக்கும் நிலையில் இதுகுறித்து சான்ட்னெர் கூறுகையில் ‘‘நாங்கள் சிறந்த அணியுடன் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். ஆனால் போதுமான அளவிற்கு திறமையை வெளிப்படுத்தவில்லை. எங்களுடைய திட்டம் சரியாகத்தான் இருந்தது. ஆனால் அதை வெளிப்படுத்துவதில் தவறு நிகழ்ந்துள்ளது. மிடில் ஆர்டர் வரிசையில் இந்தியாவின் முன்னணி விக்கெட்டுக்களை வீழ்த்தி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். இந்திய பேட்ஸ்மேன்கள் எங்களை வெறுக்கும் அளவிற்கு வெளியேற்றிவிட்டனர். அவர்களை விக்கெட்டுக்களை விரைவில் வீழ்த்தும் வழியைத்தேட வேண்டும்.



    பேட்டிங்கை பொறுத்த வரையில் போட்டி முழுவதும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைய முயற்சிப்போம். கடந்த போட்டியில் ராஸ் டெய்லர் - டாம் லாம் ஜோடி சிறப்பாக விளையாடியது. அவர்கள் ஆட்டமிழந்த பிறகு எங்களது விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. முதல் 10 ஓவரில் இந்திய பந்து வீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசுகிறார்கள். உண்மையிலேயே எங்களால் அதை எதிர்கொள்ள முடியவில்லை.

    முதல் 10 ஓவரில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டால் அதன்பின் எங்களிடம் திறமையான ஹிட் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதனால் சிறந்த ஸ்கோரை எட்ட இயலும்’’ என்றார்.
    Next Story
    ×