search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் - தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவல் ஜூன் 6 வரை நீட்டிப்பு
    X

    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் - தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவல் ஜூன் 6 வரை நீட்டிப்பு

    ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவலை ஜூன் 6 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #IPLbettingcase #KingpinbookieSonu
    மும்பை:

    சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூதாட்ட தரகர் சோனு ஜலான் மற்றும் 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். 

    கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கும், இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, தானே போலீசார், அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பினர். இன்று அவர் போலீசார் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    இந்நிலையில், பிடிபட்ட சோனு ஜலான் இன்று தானே நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். சூதாட்ட வழக்கு ஜாமினில் விடுவிக்கப்படக்கூடிய குற்றப்பிரிவு சட்டத்தின்கீழ் வருவதால் சோனு ஜலானை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர், மாஜிஸ்திரேட்டிடம் கேட்டுக் கொண்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸ் தரப்பு வக்கீல், கைதான சோனு ஜலானுடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலரை பற்றி விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரினார். இதைதொடர்ந்து, தரகர் சோனு ஜலானின் போலீஸ் காவல் ஜூன் 6 வரை நீட்டித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். #IPLbettingcase #KingpinbookieSonu 
    Next Story
    ×