search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷுப்மான் கில் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார்- தினேஷ் கார்த்திக்
    X

    ஷுப்மான் கில் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார்- தினேஷ் கார்த்திக்

    சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 57 ரன்கள் குவித்த ஷுப்மான் கில்லை தினேஷ் கார்த்திக் வெகுவாக பாராட்டியுள்ளார். #IPL2018 #KKRvCSK
    கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கொல்கத்தா அணி 40 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. இந்நிலையில் 4-வது வீரராக 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்திய ஷுப்மான் கில் களம் இறக்கப்பட்டார்.

    4-வது வீரராக களம் இறங்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு 36 பந்தில் 57 ரன்கள் குவித்து அணியை வெற்றி பெற வைத்தார். ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் இதுவாகும்.



    அரைசதம் அடித்த ஷுப்மான் கில்லை அந்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் வெகுவாக பாராட்டியுள்ளார். ஷுப்மான் கில் குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘அணியில் ஏராளமான 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களை ஏலம் எடுத்ததற்காக அணி நிர்வாகத்தை பாராட்டியே ஆக வேண்டும். அனைவரும் திறமை வாய்ந்த வீரர்கள்.

    ஷுப்மான் கில் பெரும்பாலான நேரத்தில், தான் சந்திக்கும் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டும் திறமை பெற்றுள்ளார். ஷுப்மான் கில் ஸ்பெஷல். அவர் மீது அதிகப்படியான எதிர்பார்ப்பை உண்டாக்கி நெருக்கடியை ஏற்படுத்த விரும்பவில்லை. அவர் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார்’’ என்றார்.
    Next Story
    ×