search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரைசதம் அடித்த பிலாண்டர்
    X
    அரைசதம் அடித்த பிலாண்டர்

    கேப் டவுன் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றிக்கு 430 ரன்கள் இலக்கு

    கேப் டவுனில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 430 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது தென்ஆப்பிரிக்கா. #SAvAUS
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 311 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் டீன் எல்கர் கடைசி வரை களத்தில் நின்று 141 ரன்கள் அடித்தார். டி வில்லியர்ஸ் 64 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், ஹசில்வுட், நாதன் லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, மோர்கல் ஆகியோர் சிறப்பான பந்து வீச்சால் 69.5 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா 255 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் பான்கிராப்ட் 77 ரன்னும், நாதன் லயன் 47 ரன்னும் எடுத்தனர். ரபாடா, மோர்கல் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்ற தென்ஆப்பிரிக்கா, 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் மார்கிராம் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்க்க, தென்ஆப்பிரிக்கா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 51 ரன்னுடனும், டி காக் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. டி வில்லியர்ஸ் 63 ரன்கள் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து டி காக் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். பிலாண்டர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் டி காக் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய டி காக் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


    டி வில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய சந்தோசத்தில் ஹசில்வுட்

    ரபாடா 20 ரன்கள் எடுத்த நிலையிலும், மகாராஜ் 5 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தாலும் மறுமுனையில் பிலாண்டர் அரைசதம் அடித்தார். கடைசி விக்கெட்டாக களம் இறங்கிய மோர்கல் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 373 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பிலாண்டர் 52 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட், கம்மின்ஸ், நாதன் லயன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து தென்ஆப்பிரிக்கா 429 ரன்கள் முன்னிலைப்  பெற்றுள்ளன. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 430 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ள தென்ஆப்பிரிக்கா. 430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    Next Story
    ×