என் மலர்

  செய்திகள்

  ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்
  X

  ஆஸ்திரேலிய ஓபன்: நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் நம்பர் ஒன் வீரரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் ஸ்ரீகாந்த் கிதாம்பி.
  சிட்னி நகரில் ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிதாம்பி, நம்பர் ஒன் வீரரான தென்கொரியாவின் சன் வான் ஹோ-வை எதிர்கொண்டார்.

  சீன வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய ப்ரணீத்

  முதல் செட்டை 15-21 என இழந்த ஸ்ரீகாந்த், பின்னர் சுதாரித்துக் கொண்டு 2-வது செட்டை 21-13 எனவும், 3-வது செட்டை 21-13 எனவும் கைப்பற்றி சன் வான் ஹோ-வை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஏற்கனவே, கடந்த வருடம் நடைபெற்ற இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டனில் சன் வான் ஹோ-வை 21-15, 14-21, 24-22 என வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  மற்றொரு 2-வது சுற்றில் பி சாய் ப்ரணீத், சீனாவின் ஹுயாங் யஜியாங்கை 21-15, 18-21, 21-13 என வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் இந்திய வீரர்களான ஸ்ரீகாந்த் - ப்ரணீத் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
  Next Story
  ×