என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
    • தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார்.

    பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் நேற்று 3ஆவது மற்றும் கடைசி போட்டி பைசலாபாத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்ற பாகிஸ்தான் 2 - 1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    தொடரை இழந்தாலும் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக் தொடர் நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் ஒருநாள் தொடரில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை (POTS) வென்ற விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற தோனியின் (7) சாதனையை டி காக் (7) சமன் செய்தார். 

    • டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.
    • சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.

    டபிள்யூ. டி. ஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடைபெற்றது.

    இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனை யான சபலென்கா (பெலா ரஸ்)-ரைபகினா (கஜகஸ் தான்) மோதினார்கள்.

    இதில் ரைபகினா 6-3, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் சபலென்காவை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

    • ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.
    • ராகுல் கிராண்ட்சிலாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார்.

    6-வது ஏசியன் தனிநபர் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை எஸ்.ஆர்.எம். ஐ.எஸ்.டி.யில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான வி.எஸ்.ராகுல் பங்கேற்றுள்ளார்.

    இந்த தொடரில் இன்னும் ஒரு சுற்று மீதம் உள்ள நிலையில் ராகுல் சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தார்.

    மேலும், ரேட்டிங்கில் ராகுல் 2,400 புள்ளிகளை எட்டிய நிலையில் கிராண்ட்சிலாம் பட்டத்துக்கான இறுதி நார்ம்ஸை பூர்த்தி செய்தார்.

    இதன் மூலம் 21 வயதான ராகுல் இந்தியாவின் 91-வது கிராண்ட் மாஸ்டராகி உள்ளார். எஸ்.ஆர்.எம். கல்லூரியின் 15-வது கிராண்ட் மாஸ்டராவார்.

    • வெஸ்ட் இண்டீஸ் 12.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் அடித்திருந்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் அடுத்த 6.3 ஓவர்களில் 78 ரன்களை அடித்து அசத்தியது

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

    முதலாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், 2 ஆவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

    இன்று 3 ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கான்வே 56 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    12.3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்களை மட்டுமே எடுத்து அடித்திருந்தது. அப்போது 9 விக்கெட்டுக்கு கைகோர்த்த ரோமாரியோ ஷெஃபெர்ட் - ஷாமர் ஸ்பிரிங்கர் ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை நாளா பக்கமும் பறக்கவிட்டு ரன்களை சேர்த்தது.

    இந்த ஜோடி அடுத்த 6.3 ஓவர்களில் 78 ரன்களை சேர்த்தது. கடைசி 7 பந்தில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாமர் ஸ்பிரிங்கர் தனது விக்கெட்டை பறிகொடுக்க இறுதி ஓவரில் ரோமாரியோ ஷெஃபெர்ட்டும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் 19.5 ஓவர்கள் முடிவில் 168 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. இதன்மூலம் 9 ரன்கள் விதிசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ரோமாரியோ ஷெஃபெர்ட் 49 ரன்னும் ஷாமர் ஸ்பிரிங்கர் 39 ரன்னும் அடித்து அவுட்டாகினர்.

    இந்த வெற்றியின் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை பெற்றது.

    • அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    • டி.குகேஷ், பிரனேஷ், தீப்தி யான் கோஷ் ஆகிய 3 வீரர்களும் 2-வது சுற்றில் தோல்வி.

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீரா்கள் பங்கேற்றனர்.

    முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.

    2-வது சுற்று முடிவில் 74 பேர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள். 3-வது சுற்று நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த சுற்றுக்கு 10 இந்திய வீரர்கள் தகுதி பெற்று இருந்தனர்.

    3-வது சுற்றின் 2-வது ஆட்டத்தின் முடிவில் அர்ஜூன் எரிகைசி, பிரக் ஞானந்தா, பிரணவ், அரிகிருஷ்ணா ஆகிய 4 இந்திய வீரர்கள் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    அர்ஜூன் எரிகைசி உஸ்பெகிஸ்தான் வீரர் வோசிடாவை முதல் ஆட்டத்தில் 30-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வென்றார். 2-வது ஆட்டத்தில் அவர் 'டிரா' செய்தார்.

    சென்னை கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா அர்மேனிய வீரர் ஹோவன்னிசியை எதிர் கொண்டார். முதல் ஆட்டத்தை 'டிரா' செய்த அவர் 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்றார். 42-வது நகர்த்த லுக்கு பிறகு இந்த வெற்றி கிடைத்தது.

    அரிகிருஷ்ணா பெல்ஜியம் வீரர் டேனியலுடன் முதல் ஆட்டத்தில் வென்று 2-வது ஆட்டத்தில் 'டிரா' செய்தார். இதேபோல பிரணவும், லாத்வியா வீரருடன் முதல் போட்டியில் வென்று 2-வது ஆட்டத்தில் 'டிரா' செய்தார்.

    விதித் குஜராத்தி, எஸ்.எல்.நாராயணன், கார்த்திக் வெங்கட்ராமன் ஆகிய 3 வீரர்கள் 2-வது ஆட்டத்திலும் 'டிரா' செய்தனர். இதனால் இன்றைய டை பிரேக்கரில் ஆடுகிறார்கள். இதில் வெற்றி பெற்றால் 4-வது சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

    உலக சாம்பியன் டி.குகேஷ், பிரனேஷ், தீப்தி யான் கோஷ் ஆகிய 3 வீரர்களும் 2-வது சுற்றில் தோற்று வெளியேறினார்கள்.

    • பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர்.
    • மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உள்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.

    இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். மேலும் பாகிஸ்தான் மந்திரியாக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிசிசிஐ-க்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    • எம் எஸ் தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.
    • தோனி குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம் எஸ் தோனி . அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக கபில் தேவுக்கு பிறகு 2-வது உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் டோனி ஆவார்.

    தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு அவர் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகிறது. அவர் ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டாலும் சரி, பைக் ஓட்டினாலும் சரி, விமான நிலையத்தில் இருந்து நடந்து வந்தாலும் சரி உடனே அந்த வீடியோ வைரலாகி விடும்.

    அந்த வகையில் ரசிகர் ஒருவரின் பைக்கின் எம்.எஸ். தோனி ஆட்டோகிராப் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரோகித் உடல் எடை அதிகரித்தார்.
    • ரோகித்தின் உடல் எடை இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளது

    2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அந்த தொடருக்கு பின்பு டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்றார்.

    அதன்பின்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற ரோகித் உடல் எடை அதிகரித்தார். இதனால் அவரது உடல் எடை விமர்சனத்திற்கு உள்ளது

    இதனிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோகித் சுமார் 15 கிலோ வரை எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் 3 போட்டிகளில் 202 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

    ஆஸ்திரேலிய தொடருக்கு பின்னரும் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வரும் ரோகித் கூடுதலாக 5 கிலோ எடை வரை குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

    அடுத்ததாக இந்தியாவில் நடைபெறவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.
    • அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார்

    போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40) தற்போது அல் நசார் க்ளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், சவுதி கால்பந்து லீக்கில் அல் நசார் க்ளப்காக 100 கோல்கள் பங்களிப்பு (83 கோல்கள் + 17 Assists) செய்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார்.

    இதன் மூலம் கால்பந்து வரலாற்றில் நான்கு வெவ்வேறு கிளப்புகளுக்காக 100 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

    கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரொனால்டோ தான் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.

    நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.

    பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.

    2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

    மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
    • இணையத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வைரலானார்.

    மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை வென்றது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இணையத்தில் அவர் வைரலானார்.

    இந்நிலையில், மும்பை விமான நிலையம் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் துணை ராணுவத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

    • கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது.
    • மூன்றாவது சுற்றில் குகேஷ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பனாஜி:

    கோவாவில் செஸ் உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதன் மூன்றாவது சுற்றுப் போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.

    இந்நிலையில், 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் குகேஷும், ஜெர்மனியின் ஃபிரெடிரிக் ஸ்வேனும் மோதிக்கொண்டனர்..

    இருவருக்குமான முதல் போட்டி டிராவில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் ஃபிரெடிரிக் ஸ்வேனே குகேஷை வீழ்த்தினார் . இதனால் மூன்றாவது சுற்றிலேயே குகேஷ் தொடரிலிருந்து வெளியேறினார்.

    கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் உலக சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×