என் மலர்tooltip icon

    விளையாட்டு

    உலகக் கோப்பை செஸ் போட்டி: 4-வது சுற்றுக்கு பிரக்ஞானந்தா முன்னேற்றம்
    X

    உலகக் கோப்பை செஸ் போட்டி: 4-வது சுற்றுக்கு பிரக்ஞானந்தா முன்னேற்றம்

    • அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
    • ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

    11-வது பீடே உலக கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 8 சுற்றுகளை கொண்டது.

    நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் 82 நாடுகளில் இருந்து 206 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    முதல் சுற்றில் 156 பேர் ஆடினார்கள். இதன் முடிவில் 78 வீரர்கள் அடுத்த ரவுண்டுக்கு முன்னேறினார்கள். உலக சாம்பியன் டி.குகேஷ் உள்ளிட்ட 'டாப்-50' வீரர்கள் நேரடியாக 2-வது சுற்றில் இடம்பெற்றனர்.

    பின்னர் நடைபெற்ற 2-வது சுற்றில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி வெற்றியுடன் கணக்கை தொடங்கினார். அவர் பல்கேரிய வீரர் மார்டின் பெட்ரோவை 37-வது காய் நகர்த்தலுக்கு பிறகு வீழ்த்தினார்.

    2-வது ஆட்டத்திலும் அர்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றார். இதன் மூலம் அர்ஜூன் எரிகைசி 2 புள்ளிகளை பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    தொடர்ந்து, நேற்று நடைபெற்ற 3வது சுற்றில் வெற்றி பெற்று பிரக்ஞானந்தா 4வது சுற்றுக்கு முன்னேறினார். ஆர்மேனிய வீரர் ராபர்ட் அராரதியை 1.5 -05 என்ற கணக்கில் தோற்கடித்து அசத்தியுள்ளார்.

    மேலும், அர்ஜுன் எரிகைசி, பிரணவ் வெங்கடேஷ், ஹரிகிருஷ்ணா ஆகிய இந்திய வீரர்களும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.

    Next Story
    ×