என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க மோசின் நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்
    X

    இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க மோசின் நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்

    • பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர்.
    • மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார்.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் நடந்த ஆசிய கோப்பையை கைப்பற்றியது. இறுதிப்போட்டி உள்பட 3 முறை இந்திய அணி பாகிஸ்தானை இந்த தொடரில் வீழ்த்தியது.

    இந்த போட்டியின் போது பஹல்காம் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்து விட்டனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரான மோசின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ளார். மேலும் பாகிஸ்தான் மந்திரியாக இருக்கும் அவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனால் நக்வி ஆசிய கோப்பையை தன் கையோடு எடுத்து சென்று விட்டார். இது மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில், இந்தியாவுக்கு ஆசிய கோப்பையை வழங்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மோசின் நக்வி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிசிசிஐ-க்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூகமான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×