என் மலர்

  செய்திகள்

  மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: விரைவில் வெளியாகிறது
  X

  மாருதி சுசுகி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்: விரைவில் வெளியாகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ்ட் டிரைவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த மாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  புதுடெல்லி:

  மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் டெஸ் டிரைவின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மாருதி சுசுகியின் பிளாக்ஷிப் கார் நெக்சா விநியோகஸ்தர்களிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் ஏற்கனவே ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதே மாடல் தான் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடல் வெளியீடு மற்றும் ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பின் நிர்ணயம் செய்யப்பட இருக்கும் விலை இதன் விற்பனையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.   

  வடிவமைப்பை பொருத்த வரை ஐரோப்பில் வெளியிட்ட மாடலை போன்றே இந்தியாவில் வெளியிடப்பட இருக்கும் எஸ்-கிராஸ் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதன் கிரில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லைட் மற்றும் பகல் நேரத்திலும் இயங்கும் இன்டகிரேட்டெட் எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது.

  முன்பக்க பம்ப்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் ஹெட்லேம்ப்கள் கச்சிதமாக பொருந்தியுள்ளது. இதன் பக்கவாட்டில் ராப்-அரவுண்டு பாடி 16-இன்ச் அலாய் வீல் மற்றும் பின்புற எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளது. 

  தற்சமயம் விற்பனை செய்யப்படும் எஸ்-கிராஸ் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களிலும், சிக்மா, டெல்டா, செடா மற்றும் ஆல்ஃபா என நான்கு ட்ரிம் வீல்களை கொண்டுள்ளது. எனினும் 1.6 லிட்டர் டீசல் மாடல் டாப்-என்ட் ஆல்ஃபா ட்ரிம் லெவலில் வழங்கப்படுகிறது. புதிய மாடல்களிலும் இதே ஆப்ஷன்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  சிறப்பம்சங்களை பொருத்த வரை 7-இன்ச் ஸ்மார்ட் பிளே டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நேவிகேஷன் மற்றும் 16 இன்ச் புதிய அலாய் வீல்கள், முன்பக்கம் டூயல் ஏர்பேக்ஸ், ABS மற்றும் EBD, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, பார்க்கிங் சென்சார் மற்றும் ISOFIX சைல்டு சீட் மவுன்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

  முந்தைய டீசல் இன்ஜின் ஆப்ஷன்களிலேயே புதிய மாருதி சுசுகி எஸ்-கிராஸ் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க மாடல் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இன்ஜின் 89 BHP செயல்திறனை அதிகபட்சம் 200 Nm டார்கியூவுடன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 1.6 லிட்டர் DDiS 320 டீசல் மோட்டார் 118 BHP செயல்திறனை அதிகபட்சம் 200 Nm டார்கியூ வெளிப்படுத்துவதோடு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது. 

  தற்சமயம் எஸ்-கிராஸ் விலை ரூ.8.38 லட்சத்தில் துவங்கி ரூ.12.43 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட எஸ்-கிராஸ் துவக்க விலை ரூ.8.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.13 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  Next Story
  ×