search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயத்தை வலுப்படுத்தினால், நாடு முன்னேறும்- மத்திய மந்திரி தோமர் பேச்சு
    X

    மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர்

    விவசாயத்தை வலுப்படுத்தினால், நாடு முன்னேறும்- மத்திய மந்திரி தோமர் பேச்சு

    • விவசாயிகளின் வருமானம் இருமடங்காக அதிகரிக்க பிரதமர் வலியுறுத்தல்,
    • செலவைக் குறைத்து, வருமானத்தை அதிகரிப்பது அவசியம்.

    மொரேனா:

    மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனாவில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் பயிற்சி முகாம் நிறைவு நாளில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நமது நாட்டில் விவசாயம் முக்கிய தொழில். வேளாண்மையை நாம் வலுப்படுத்தினால், நாடும் வளமாகும். வேளாண் பொருளாதாரத்தில் பெரும் ஆற்றல் உள்ளது. ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும்போது, வேளாண் துறையே பாதுகாவலாக இருக்கும்.

    முன்பு, வேளாண்மை சார்ந்த திட்டங்கள் உற்பத்தி சார்ந்ததாக இருந்தன. தற்போது அவை விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். அதன்பின், மத்திய, மாநில அரசுகள், விவசாயிகள் ஒன்று சேர்ந்து இந்தத் திசையில் பயணித்து வருகின்றனர்.

    வேளாண்மைக்கு ஆகும் செலவைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது அவசியம். உற்பத்தி பொருட்களின் தரமும் மிகவும் உயர்தரத்துடன் இருப்பது அவசியமாகும். விவசாயத்துக்கு தண்ணீர் செலவு குறைக்கப்பட்டு, நுண்ணீர் பாசனத்துக்கு மாற வேண்டும்.

    யூரியா, டி.ஏ.பி. உரங்களின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும். உயிரி உரம், நானோ யூரியா பயன்பாடு அதிகரிக்க வேண்டும். இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்பட வேண்டும். இயற்கை முறையில் உரத்தைத் தயாரித்தால், செலவு குறைவதுடன், ஆரோக்கியத்துக்கும் நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×