என் மலர்

  இந்தியா

  டெல்லியில் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X

  குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  டெல்லியில் குடியரசு துணைத்தலைவரை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
  • டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

  புதுடெல்லி:

  சென்னையில் கடந்த ஜூலை 28-ந்தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற்றது. செஸ் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று சென்னைக்கு வந்த அவர், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

  மாமல்லபுரத்தில் நடந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.

  இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று விமானத்தில் டெல்லி புறப்பட்டார். முதல்-அமைச்சரின் செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் டெல்லி சென்றுள்ளனர்.

  இந்நிலையில் டெல்லியில் இன்று காலை குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். குடியரசு துணைத்தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள ஜெகதீப் தன்கருக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்தார்.

  Next Story
  ×