search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்- வைகோ கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
    X

    5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்- வைகோ கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்

    • தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களால் 2022-23-ம் ஆண்டில் 5 ஜி அலைபேசி சேவை தொடங்கப்படலாம்.
    • ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது அனைத்து ஏலதாரர்களுக்கும் தெரியும்.

    பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி. நாட்டில் 5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்ப டுத்தப்படும்?

    5 ஜி அலைக்கற்றையின் ஏலச் செயல்பாட்டின் போது ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் வைப்புத்தொகை வசூலிக்கப்படுமா? படாதா?

    வசூலிக்கப்பட வில்லை எனில், காரணம் என்ன? அரசுக்கு ஏற்படும் இழப்பு எவ்வளவு? என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் வரு மாறு:-

    தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களால் 2022-23-ம் ஆண்டில் 5 ஜி அலைபேசி சேவை தொடங்கப்படலாம். நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்பு வளர்ந்து வருவதால், 5ஜி சேவைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

    ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக்கட்டணம் சரி செய்யப்பட்ட மொத்த வருவாயின் சராசரி சதவீதமாக கணக்கிடப்படுகிறது. ஸ்பெக்ட்ரம் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்பட்ட போது, இது ஏலத்திற்கு முன் தேதியிட்ட மரபு ஆகும்.

    தொலைத்தொடர்புத் துறையில் கட்டமைப்பு மற்றும் நடைமுறைச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், பணப் புழக்கத்தை எளிதாக்கவும் 'தொலைத்தொடர்புத் துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் ஆதரவு தொகுப்பு' க்கு அமைச்சரவை 2021 செப்டம்பரில் ஒப்புதல் அளித்தது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய், வங்கி உத்தரவாதத் தேவைகளின் முறைப்படுத்துதல், தாமதமாகக் கொடுப்பவைகளுக்கான வட்டி விகிதத்தை முறைப்படுத்துதல், எதிர்கால ஏலங்களில் கூடுதல் நிதிச்சுமை இல்லாமல் ஸ்பெக்ட்ரம் பகிர்வு போன்றவை சீர்திருத்த நடவடிக்கைகளில் அடங்கும்.

    எதிர்கால ஏலங்களில் ஸ்பெக்ட்ரம் மீதான பயன்பாட்டுக் கட்டணங்கள் நீக்கம், தொலை தொடர்பு சேவை வழங்குபவர்களின் ஒழுங்குமுறைச் சுமையைக் குறைக்கப் பயன்படும்.

    ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டண விகிதங்களில் மாற்றம் செய்துள்ளது அனைத்து ஏலதாரர்களுக்கும் தெரியும். 2022-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் ஏல நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்ளவும், குறிப்பிடத்தக்க அளவில் ஸ்பெக்ட்ரம் வருமானம் வளர்ச்சிக்கு செப்டம்பர் 2021-ல் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் காரணம் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×