search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சிம்லாவில் நிலச்சரிவு- கோவில் இடிந்து விழுந்து 9 பக்தர்கள் பலி
    X

    சிம்லாவில் நிலச்சரிவு- கோவில் இடிந்து விழுந்து 9 பக்தர்கள் பலி

    • டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரி கட்டிடம் வெள்ளத்தில் சிக்கி சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

    சிம்லா சம்மர்ஹில் பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்துகொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கோவில் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பேர் இறந்தனர். பலர் கோவிலுக்குள் சிக்கி உள்ளனர். இது பற்றி அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதல்- மந்திரி சுக்வீந்தர் சிங் நேரில் சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டார்.

    உத்தரகாண்ட் மாநிலத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. டேராடூனில் உள்ள ராணுவ கல்லூரி கட்டிடம் வெள்ளத்தில் சிக்கி சீட்டு கட்டு போல சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    Next Story
    ×