search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் நிபா வைரஸ் 2-வது அலை இல்லை- சுகாதாரத்துறை மந்திரி பேட்டி
    X

    கேரளாவில் நிபா வைரஸ் 2-வது அலை இல்லை- சுகாதாரத்துறை மந்திரி பேட்டி

    • மத்திய சுகாதாரக்குழுவும் கேரளாவில் முகாமிட்டு நோய் தொற்று கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை எடுத்துள்ளது.
    • மாநிலம் முழுவதும் நிபா வைரஸ் தொற்று சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவல் வேகமாக உள்ளது. இந்த நோய் தொற்றுக்கு கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    மத்திய சுகாதாரக்குழுவும் கேரளாவில் முகாமிட்டு நோய் தொற்று கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளை எடுத்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக கோழிக்கோடு மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 23-ந்தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினரின் சோதனையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் 1192 பேர் இருந்தது தெரிய வந்துள்ளது. இதில் 97 பேர் அடையாளம் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மாநிலம் முழுவதும் நிபா வைரஸ் தொற்று சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் 6 பேருக்கு நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 2 பேர் இறந்து விட்ட நிலையில் 4 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். கடந்த 2 நாட்களில் புதிய நேர்மறை வழக்குகள் எதுவும் இல்லை. 51 பேரின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் இன்னும் வரவில்லை. கட்டுப்பாடு மண்டலங்களில் உள்ள 22 ஆயிரத்து 8 வீடுகளிலும் கண்காணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிபா வைரசின் 2-வது அலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×