என் மலர்

  இந்தியா

  டெல்லியில் மர்ம நபர்களால் இளைஞர் குத்திக் கொலை- போலீஸ் விசாரணை
  X

  டெல்லியில் மர்ம நபர்களால் இளைஞர் குத்திக் கொலை- போலீஸ் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
  • சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

  வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 22 வயது இளைஞரை மர்ம கும்பல் குத்திக் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பீகாரில் உள்ள பூர்ணியா பகுதியைச் சேர்ந்த அனவருல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், பள்ளிப் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அனவருல் ஹக்கை மர்ம நபர்கள் குத்திக் கொலை செய்துள்ளனர்.

  இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  கஜூரி காஸ் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் சிலர் கத்தியால் குத்தியதாக அழைப்பு வந்தது. உடனடியாக, போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் அதற்குள், காயமடைந்த நபரை மக்கள் மருத்துவமனைக்கு மாற்றினர். இருப்பினும் சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×