search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: சித்தராமையா குற்றச்சாட்டு
    X

    கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: சித்தராமையா குற்றச்சாட்டு

    • மங்களூருவில் பிரவீன் நெட்டார் கொலையை கண்டித்து பா.ஜனதாவினரே போராட்டம் நடத்துகிறார்கள்.
    • இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது.

    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    மூத்த மந்திரி மாதுசாமி, 'அரசு செயல்படவில்லை, நாங்கள் இந்த அரசை தள்ளி கொண்டு செல்கிறோம்' என்று கூறியுள்ளார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இந்த உண்மையை மூடிமறைக்க, மாதுசாமிக்கு எதிராக சில மந்திரிகளை ஏவி விட்டுள்ளார். மந்திரிகள் எஸ்.டி.சோமசேகர், முனிரத்னா ஆகியோர் மாதுசாமிக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

    பசவராஜ் பொம்மை இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறார். இந்த அரசு உயிருடன் தான் உள்ளது என்று சொல்ல முடியுமா?. இந்த அரசுக்கு பசவராஜ் பொம்மை தலைமை தாங்கியுள்ளாரா? என்று கருத முடியுமா?. இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது.

    மங்களூருவில் பிரவீன் நெட்டார் கொலையை கண்டித்து பா.ஜனதாவினரே போராட்டம் நடத்துகிறார்கள். மந்திரி ஸ்ரீராமுலு என்னை விமர்சித்துள்ளார். அதுபற்றி நான் பேச மாட்டேன். அவரை துணை முதல்-மந்திரியாக ஆக்குவதாக கூறினர். அதை பா.ஜனதா செய்யவில்லை. வால்மீகி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அதிகரிக்க கோரி அந்த சமூக மடாதிபதிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.

    Next Story
    ×