search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
    X

    ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு

    • ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.
    • எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பை பொறுத்தமட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதி முடிவடைகிறது.

    இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

    இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. டெல்லி விக்யான் பவனில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் நிருபர்கள் சந்திப்பின்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. 2017ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜூலை 17ந் தேதி நடைபெற்றது.

    பாராளுமன்றத்தின் இரு அவைகளின் எம்.பி.க்கள் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடுவார்கள்.

    ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். மக்களவை, மேல்சபையை சேர்ந்த 776 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டு மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 408 ஆகும்.

    எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பை பொறுத்தமட்டில் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.

    பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தங்களது வேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்கும், எதிர்க்கட்சிகள் ஒன்று இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் செயலில் தெலுங்கானா முதல் மந்திரியும், டி.ஆர்.எஸ். கட்சி தலைவருமான சந்திரசேகரராவ் ஈடுபட்டுள்ளார்.

    ஜனாதிபதி தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதாதளம் கட்சிக்கு 2.9 சதவீத வாக்குகள் உள்ளது. இதனால் அந்த கட்சியின் முடிவு முக்கியமானது.

    Next Story
    ×