search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்து  முன்னணி நாடாக மாற வேண்டும்- பிரதமர் பேச்சு
    X

    விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைந்து முன்னணி நாடாக மாற வேண்டும்- பிரதமர் பேச்சு

    • கூட்டு நடவடிக்கை மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை என பிரதமர் வலியுறுத்தல்

    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் இன்று நிதி ஆயோக்கின் 7-வது நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவடைதல், தேசிய கல்வி கொள்கை, நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 23 மாநில முதல்-மந்திரிகள், 3 துணைநிலை கவர்னர்கள், அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர், முழுநேர உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் அதன் வலிமைக்கு ஏற்ப முக்கிய பங்காற்றியது. இந்த கூட்டு நடவடிக்கையின் மூலம் வளரும் நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக திகழ்வதற்கு வழி வகுத்தது. ஜி.எஸ்.டி. வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. நமது பொருளாதார நிலையை வலுப்படுத்தவும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறவும் இது முக்கியமானது.

    மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விவசாயத் துறையை நவீனமயமாக்க வேண்டும். அதன்மூலம் விவசாயத் துறையில் இந்தியா தன்னிறைவு அடைய முடியும், உலக அளவில் முன்னணியில் இருக்க முடியும். எளிதான வாழ்க்கை, வெளிப்படையான சேவை வழங்குதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்கு, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் விரைவான நகரமயமாக்கல் பலவீனத்திற்குப் பதிலாக இந்தியாவின் பலமாக மாறும். சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைய வேண்டும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×