search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாலைத் தடுப்பில் மோதி கார் விபத்து - பிரதமர் மோடியின் சகோதரர் காயம்
    X

    சேதமடைந்த கார்

    சாலைத் தடுப்பில் மோதி கார் விபத்து - பிரதமர் மோடியின் சகோதரர் காயம்

    • பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி சென்ற கார் விபத்தில் சிக்கியது.
    • மைசூரு அருகே சாலை தடுப்பின் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

    பெங்களூரு:

    பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் உள்ள பந்திபுராவில் சென்றபோது சாலை பிரகலாத் மோடியின் கார் விபத்தில் சிக்கியது. சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பிரகலாத் மோடி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×